/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பட்டாசு விபத்து கல்வி உதவி வயது வரம்பு அறிவிப்பு
/
பட்டாசு விபத்து கல்வி உதவி வயது வரம்பு அறிவிப்பு
ADDED : மார் 03, 2025 06:43 AM
விருதுநகர்: கலெக்டர் ஜெயசீலன் செய்திக்குறிப்பு: பட்டாசு விபத்தில் இறந்த தொழிலாளர்களின் குழந்தைகளின் உயர்கல்வி செலவை அரசே ஏற்கும் என்ற 2024 நவ. 10ல் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இந்நிலையில் இதற்கு ரூ.5 கோடி ஒதுக்கப்பட்டது.10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.4000, பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.6000 ஆகிய ஒரு தடவை மட்டும் வழங்கப்படும்.
விபத்தில் தாய் தந்தை இருவரில் எவரேனும் ஒருவர் மரணமடைந்த நிகழ்வில் மாதாந்திர பராமரிப்பு செலவினம் ரூ.2000ம், (18 வயது பூர்த்தி ஆகும் வரை), தாய் தந்தை இருவரும் மரணமடைந்த நிலையில் மாதாந்திர பராமரிப்பு செலவினம் ரூ.4000 (18 வயது பூர்த்தி ஆகும் வரை) பெறலாம். 2024 நவ. 10க்கு முன், பின் நிகழ்ந்த விபத்துக்களில் உயிரிழந்த தொழிலாளர்களின் குழந்தைகள், நவ. 10 அன்று 18 வயது நிறைவடையாதவர்களாகவும் இருந்தால் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு 98659 58876, 93447 45064 எண்களை தொடர்பு கொள்ளலாம், என்றார்.