ADDED : ஜூலை 04, 2024 12:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை தேவாங்கர் கலை கல்லுாரியில் முதலாம்ஆண்டு படிக்கும் மாணவர்கள் துவக்க விழா, அறிமுக விழா நடந்தது.
முதல்வர் உமாராணி தலைமை வகித்தார். பேராசிரியர் குணசேகரன் முன்னிலை வகித்தார். பேராசிரியர் சுந்தரமூர்த்தி வரவேற்றார். பேராசிரியர் கோபால் பாடத்திட்டம் மதிப்பெண்கள் வழங்கப்படும் முறைகள் குறித்து விளக்கினார்.
நான் முதல்வன் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் சரவணமூர்த்தி பேசினார்.
நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் தொகுத்து வழங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழக ஒருங்கிணைப்பாளர்சந்திரசேகரன் நன்றி கூறினார்.