/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
விருதுநகர் முதல் டில்லி வரை பெண் போலீசிடம் பழகிய ராம்குமார்
/
விருதுநகர் முதல் டில்லி வரை பெண் போலீசிடம் பழகிய ராம்குமார்
விருதுநகர் முதல் டில்லி வரை பெண் போலீசிடம் பழகிய ராம்குமார்
விருதுநகர் முதல் டில்லி வரை பெண் போலீசிடம் பழகிய ராம்குமார்
ADDED : ஜூன் 02, 2024 03:23 AM

ஸ்ரீவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் கோயில் திருவிழாவில் ராமர் என்பவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், ராமநாதபுரம் இன்ஸ்பெக்டர் சத்தியசீலாவுடன் கைதான ராம்குமார், விருதுநகர், மதுரை, ராமநாதபுரம் துவங்கி டில்லி வரை பெண் போலீஸ், இன்ஸ்பெக்டர், டி.எஸ்.பி. என பலருடன் பழகியுள்ளார் என்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர் அன்னை சத்யா நகரில் முத்துமாரி அம்மன் கோயில் திருவிழாவில் ராமர் என்பவர் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் அதே பகுதியைச் சேர்ந்த ராம்குமார், அவரது தந்தை ராமசாமி, சகோதரர் ராஜேந்திரன், அவரது மனைவி ஜெயலட்சுமி, ராமநாதபுரம் பெண் இன்ஸ்பெக்டர் சத்தியசீலா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்த விசாரணையில் வெளியான தகவல்கள் போலீசார் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இதில், பல ஆண்டுகளுக்கு முன்பு இலங்கை அகதியாக வந்து அன்னை சத்யா நகரில் ராம்குமார் குடும்பத்தினர் குடியேறி உள்ளனர். அவரது தந்தை ராமசாமி அப்பகுதியில் பெட்டிக்கடை வைத்து, பணம் கொடுக்கல், வாங்கல் செய்து வந்துள்ளார். டிப்ளமோ வரை படித்திருந்த ராம்குமாரும் பணம் கொடுக்கல், வாங்கலில் ஈடுபட்டுள்ளார்.
கடந்த அ.தி.மு.க. ஆட்சியின்போது விருதுநகர் மாவட்ட முக்கிய அதிமுக பிரமுகர்களுடன் நெருங்கிய தொடர்பு இருப்பது போல் ஒரு தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளார். இதனை சமூக வலைத்தளங்கள் மூலம் அறிந்த பெண் போலீசார், இன்ஸ்பெக்டர், டி. எஸ்.பி. ஆகியோர் ராம்குமாருடன் நட்பு பாராட்ட துவங்கியுள்ளனர்.
இந்நிலையில் ராம் குமாரின் செயல்பாட்டை உணர்ந்த அதிமுக பிரமுகர்கள் அவரை ஓரங்கட்ட துவங்கினர். இந்நிலையில் பெண்களுக்கு பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பான பிரச்சனையில் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று வந்த நிலையில், விருதுநகர், மதுரை , ராமநாதபுரத்தில் பணியாற்றிய பெண் போலீசார், பெண் இன்ஸ்பெக்டர், பெண் டி.எஸ்.பி. ஆகியோருடன் ராம்குமாருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் இதனையும் கடந்து, ஏதோ ஒரு வகையில் டெல்லியில் உள்ள ஒரு பெண் போலீஸிடமும் பழக்கம் ஏற்பட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதில் பெண் இன்ஸ்பெக்டர் சத்தியசீலா மட்டும்தான் நேரடியாக ராம்குமாருக்கு உதவி செய்து கொலை வழக்கில் சிக்கி உள்ளார். இதில் தன்னிடம் பழகிய சில பெண்களிடம் நகைகளை வாங்கிவிட்டு அவர்களுக்கு மீண்டும் திருப்பி தராமல் ராம்குமார் ஏமாற்றி வருவதாக ஸ்ரீவில்லிபுத்தூர் போலீஸ் வட்டாரத்தில் பேசப்படுகிறது.