/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
திருத்தங்கலில் கிடப்பில் போட்ட குப்பை பிரித்தெடுக்கும் பணி
/
திருத்தங்கலில் கிடப்பில் போட்ட குப்பை பிரித்தெடுக்கும் பணி
திருத்தங்கலில் கிடப்பில் போட்ட குப்பை பிரித்தெடுக்கும் பணி
திருத்தங்கலில் கிடப்பில் போட்ட குப்பை பிரித்தெடுக்கும் பணி
ADDED : ஆக 29, 2024 04:50 AM

சிவகாசி: சிவகாசி அருகே திருத்தங்கல் பேட்டை தெருவில் குப்பை பிரித்தெடுக்கும் பணி இரு ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டதால் மலை போல் குப்பை தேங்கி சுகாதார கேட்டினை ஏற்படுத்துகின்றது.
சிவகாசி அருகே திருத்தங்கல் பேட்டை தெருவில் நகரில் சேகரிக்கப்படும் குப்பை கொட்டப்படுகின்றது. இதனை மறுசுழற்சிக்காக பயன்படும் வகையில் பிரித்தெடுக்கும்பணி மூன்று ஆண்டுகளுக்கு முன் துவங்கியது.
ஆனால் அப்பணிகள் இரண்டு ஆண்டுகளாக அப்படியே கிடப்பில் போடப்பட்டு விட்டது. இதனால் அப்பகுதியில் குப்பை மலை போல் தேங்கியுள்ளது. சுற்றிலும் குடியிருப்புகள் உள்ள நிலையில் அப்பகுதி முழுவதுமே குப்பையாக காணப்படுகின்றது. மழைக்காலங்களில் துர்நாற்றம் ஏற்படுவதோடு சுகாதாரக் கேடும் ஏற்படுகின்றது. கொசு உற்பத்தியாகி தொற்று நோய் ஏற்படுகின்றது.
எனவே பேட்டை தெருவில் மீண்டும் குப்பை பிரித்தெடுக்கும் பணி நடைபெற வேண்டும் அல்லது இங்குள்ள குப்பையை முழுமையாக அகற்ற வேண்டும் என குடியிருப்புவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.