/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வனங்களில் தீ ஏற்படுவதை தடுக்க மேய்ச்சலுக்கு ஆடு, மாடுகளை அனுமதிக்க வேண்டும்
/
வனங்களில் தீ ஏற்படுவதை தடுக்க மேய்ச்சலுக்கு ஆடு, மாடுகளை அனுமதிக்க வேண்டும்
வனங்களில் தீ ஏற்படுவதை தடுக்க மேய்ச்சலுக்கு ஆடு, மாடுகளை அனுமதிக்க வேண்டும்
வனங்களில் தீ ஏற்படுவதை தடுக்க மேய்ச்சலுக்கு ஆடு, மாடுகளை அனுமதிக்க வேண்டும்
ADDED : மே 11, 2024 11:05 PM
ஸ்ரீவில்லிபுத்துார்:மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் காட்டுத்தீ ஏற்படுவதை தடுக்க, மலையில் மேய்ச்சலுக்கு மாடுகளை அனுமதிக்க, தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கடந்த நான்கு நாட்களாக காட்டு தீ தொடர்ந்து எரிந்து வந்தது. வனத்துறையினர் போராடினாலும் தீயை அணைக்க முடியவில்லை. மலைப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு பெய்த மழை, காட்டு தீயை அணைப்பதற்கு வனத்துறையினருக்கு கை கொடுத்தது.
இந்நிலையில் மாவட்ட தென்னை விவசாயிகள் சங்க தலைவர் முத்தையா முதல்வருக்கு விடுத்துள்ள கோரிக்கையில், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்யும் மழையின் காரணமாக செடி, கொடிகள், புற்கள் பல அடி உயரத்திற்கு வளர்ந்து காணப்படும். இவைகள்வெயில் காலத்தில் வறண்டு காய்ந்து சருகாகி காணப்படும்.
இதனை வனப்பகுதி மேய்ச்சலுக்கு செல்லும் ஆடு, மாடுகள் உண்பதால்,மலைப்பகுதியில் காய்ந்து காணப்படும் செடிகள்அனைத்தும், முழு அளவில் அகற்றப்பட்டு இயற்கையாகவே தீத் தெடுப்பு கோடுகள் ஏற்படும்.
ஆடு, மாடுகளால் வனத்திற்கு எவ்வித பாதிப்பும் கிடையாது. வனப்பகுதி என்பது அனைத்து உயிரினங்களும் வசிக்கும் பகுதியாகும். இங்கு செல்லும் மனிதர்கள் தான் வனத்தை பாழ்படுத்துகிறார்கள்.
மேய்ச்சலுக்கு செல்லும் ஆடு, மாடுகளின் சிறுநீர், சாணம் ஆகியவை, பசுமையாக வளர இயற்கை உரமாக மாறுகிறது. இதனால் வனப்பகுதி பசுமையாக உள்ளது.
தமிழகத்தில் சரணாலயம், புலிகள் காப்பகம்என்ற பெயரில் வனப்பகுதி மேய்ச்சலுக்கு ஆடு, மாடுகளை அனுப்பாமல் தடை விதிப்பதே, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் தீ விபத்து ஏற்படுவதற்கு முக்கிய காரணமாகும். உயர்ந்த மலைப்பகுதிகளில் வனத்துறையினரால் மட்டுமே தீயை அணைக்க முடியாது. இயற்கையாக மழை பெய்தால் மட்டுமே தீயை அணைக்க முடியும்.
ஆனால், மலைப்பகுதியில் காய்ந்து கிடக்கும் செடி, கொடிகள், புற்களை கால்நடைகள் உண்பதால் தீ விபத்து ஏற்படாத நிலை உருவாகும்.
எனவே, தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் ஆடு மாடுகளை மேய்ச்சலுக்கு அனுப்ப தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.