
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி: சிவகாசி எஸ்.எப்.ஆர்.,மகளிர் கல்லுாரியில் 49வது பட்டமளிப்பு விழா நடந்தது.
கல்லுாரி செயலர் அருணா துவக்கி வைத்தார். கல்லுாரி தலைவர் திலகவதி, நிர்வாகக் குழு உறுப்பினர்கள் விஜயலட்சுமி, ப்ரீத்தி தலைமை வகித்தனர். கல்லுாரி முதல்வர் சுதா பெரியதாய் வரவேற்றார்.
பெங்களூர் இந்திய வானியிற்பியல் கழக நிறுவனம் பேராசிரியர் ஸ்டாலின், 2020 -- 23 கல்வியாண்டில் பயின்ற 1046 மாணவிகளுக்கு பட்டம் வழங்கினார்.
பட்டம் பெற்ற மாணவிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
வரலாற்று துறை உதவி பேராசிரியர்கள் மேகலாதேவி, நீலா புஷ்பம் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.