/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நாளை மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டம்
/
நாளை மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டம்
ADDED : ஜூன் 27, 2024 06:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர் : கலெக்டர் ஜெயசீலன் செய்திக்குறிப்பு: மாவட்ட சமூகப் பாதுகாப்புத் திட்ட அலுவலகம், மாற்றுத்திறனாளிகள் துறை இணைந்து நடத்தும் மாவட்ட அளவிலான மாற்றுதிறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் நாளை ஜூன் 28ல் காலை 11:00 மணிக்கு கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது.
மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை, உதவித்தொகை, இலவச தையல் இயந்திரம், ஸ்மார்ட் போன், இலவச வீட்டுமனைப் பட்டா, இலவச பஸ் பாஸ், வேலைவாய்ப்பு கடன் வசதி உள்ளிட்ட அரசின் திட்டங்களை பெறுவதற்கான மனுக்களை தேவையான ஆவணங்களுடன் இணைத்து வழங்கலாம்.
விவரங்களுக்கு 04562 252068 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம், என்றார்.