/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
குண்டாற்றில் தவறவிட்ட நகைகள் உரியவரிடம் ஒப்படைப்பு
/
குண்டாற்றில் தவறவிட்ட நகைகள் உரியவரிடம் ஒப்படைப்பு
குண்டாற்றில் தவறவிட்ட நகைகள் உரியவரிடம் ஒப்படைப்பு
குண்டாற்றில் தவறவிட்ட நகைகள் உரியவரிடம் ஒப்படைப்பு
ADDED : ஆக 06, 2024 04:30 AM
திருச்சுழி: திருச்சுழி குண்டாற்றில் தர்ப்பணம் செய்ய வந்த போது தம்பதியினர் தவற விட்ட நகைகள் கண்டு எடுக்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டது.
திருச்சுழி அருகே குண்டாற்றில் ஆடி அமாவாசையை முன்னிட்டு நேற்று முன்தினம் பெரிய வள்ளி குளம் ராமசாமிபுரத்தை சேர்ந்த தெய்வேந்திரன் - சாவித்திரி தம்பதி தர்ப்பணம் செய்ய வந்த போது, நகைகள் வைத்திருந்த பர்ஸை தவறவிட்டனர். திருச்சுழி போலீசில் புகார் செய்தனர்.
இந்நிலையில், அங்கு தர்ப்பணம் செய்ய வந்த மடத்துப்பட்டியைச் சேர்ந்த பாண்டியம்மாள் ஆற்றுப்பகுதியில் கிடந்த பர்ஸை எடுத்து பார்த்து உள்ளார். அதில் 2 பவுன் தங்கச் செயின், ஒரு மோதிரம் இருந்துள்ளது. உடன் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸிடம் ஒப்படைத்துள்ளார். பின்னர் போலீசார் தெய்வேந்திரன் - சாவித்திரி தம்பதியை தொடர்பு கொண்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு வரவழைத்தனர். எஸ்.ஐ., வீரணன் முன்னிலையில், நகையை போலீசாரிடம் ஒப்படைத்த பாண்டியம்மாள் மூலம் நகையை சாவித்திரியிடம் கொடுத்தனர். நகையை ஒப்படைத்த பாண்டியம்மாளை போலீசாரும் , தெய்வேந்திரன் - சாவித்திரி தம்பதியினர் பாராட்டினர்.