ADDED : ஜூலை 20, 2024 12:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராஜபாளையம் : ராஜபாளையத்தில் நெடுஞ்சாலை போக்குவரத்து போலீஸ் சார்பில் டூவீலரில் செல்வோர் ஹெல்மெட் அணிவதன் அவசியம்குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
காந்தி சிலை ரவுண்டானா அருகே நெடுஞ்சாலை துறை இன்ஸ்பெக்டர் நவாஸ்தீன் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் ஹெல்மெட் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளை நிறுத்தி பாதிப்பு குறித்து பேசினார்.
அணியாமல் செல்வதால் ஏற்படும் சிக்கல், விபத்தின் போது ஏற்படும் நன்மைகள், அணியாததால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி விளக்கம் அளித்தார். எஸ்.ஐ கார்த்திகேயன் போக்குவரத்தை போலீசார் கலந்து கொண்டனர்.

