/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
குத்தகைக்கு விடப்பட்ட ஆலையில் விபத்து நடந்தால், உரிமம் யார் பெயரில் உள்ளதோ அவர் தான் பொறுப்பு
/
குத்தகைக்கு விடப்பட்ட ஆலையில் விபத்து நடந்தால், உரிமம் யார் பெயரில் உள்ளதோ அவர் தான் பொறுப்பு
குத்தகைக்கு விடப்பட்ட ஆலையில் விபத்து நடந்தால், உரிமம் யார் பெயரில் உள்ளதோ அவர் தான் பொறுப்பு
குத்தகைக்கு விடப்பட்ட ஆலையில் விபத்து நடந்தால், உரிமம் யார் பெயரில் உள்ளதோ அவர் தான் பொறுப்பு
ADDED : மே 11, 2024 11:10 PM
சிவகாசி:குத்தகைக்கு விடப்பட்ட ஆலையில் விபத்து நடந்தால், உரிமம் யார் பெயரில் உள்ளதோ அவர் தான் பொறுப்பு என பெசோ அதிகாரி கந்தசாமி பேசினார்.
மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை (பெசோ) சார்பில் தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்கம் (டான்பாமா) அலுவலகத்தில் பட்டாசு தொழில் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
இதில் பங்கேற்ற சிவகாசி பெசோ முதன்மை கட்டுப்பாட்டு அலுவலர்(பொ) கந்தசாமி பேசுகையில், மனித தவறுகளால் மட்டுமே விபத்துக்கள் நடக்கிறது என கடந்து செல்ல முடியாது. ஒரு சில விபத்துக்கள் மட்டுமே மனித தவறுகளால் நடக்கிறது. பெரும்பாலான விபத்துக்கள் விதிமீறல்களால் நடக்கிறது.
ஆண்டுதோறும் பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்திக் கொண்டே வருகிறோம். ஆனால் விபத்துக்கள் தொடர்ந்து வருவது வருத்தமான விஷயம். பெசோ உரிமம் பெற்ற ஆலைகளில் கடந்த ஓராண்டில் 30 விபத்துக்கள் ஏற்பட்டு உள்ளது.
2023ல் வெடி விபத்தில் 29 உயிரிழந்த நிலையில், இந்த ஆண்டு 5 மாதத்தில் 11 விபத்துகளில் 25 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது மிகவும் தீவிரமான விஷயம். இது பட்டாசு தொழிலுக்கு நல்லதல்ல. தொழிலாளர்களை மட்டும் குறை சொல்வதால் பயன் இல்லை. அவர்களுக்கு விதிகள் குறித்த புரிதல் இருக்காது.
ஆலையின் அனைத்து நடவடிக்கைகளும் உரிமையாளர் மற்றும் போர்மேனுக்கு தெரிந்து இருக்க வேண்டும். பட்டாசு ஆலை குத்தகைக்கு விடப்பட்டாலும் ஆலையில் விபத்து நடந்தால், உரிமம் யார் பெயரில் உள்ளதோ அவர் தான் பொறுப்பு.
பட்டாசு தொழிலில் லாபத்தை தாண்டி பாதுகாப்பு என்பது முதன்மையாக இருக்க வேண்டும். பட்டாசு தொழிலில் மனிதனால் செய்யக்கூடிய பணிகள் தான் அதிகம். உற்பத்தி செய்யும் இடத்தில் விபத்து நடப்பதற்கு வாய்ப்பு உள்ளது. ஆனால் விபத்து நடக்க கூடாத இடத்தில் விபத்து நடப்பதுதீவிரமான விதிமீறல்களால் ஏற்படுகிறது.
இன்று (நேற்று) வெடி பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டு உள்ள அறையில் விபத்து நடந்துஉள்ளது. உரிமையாளரின் கவனத்திற்கு வராமல் ஒரு ஆலை இயங்குவது பரிதாபத்திற்குரியது. வெடிபொருட்களை கையாளும் விதிகள் அடங்கிய புத்தகத்தை அனைத்து பட்டாசு ஆலை போர்மென்களுக்கும் கொடுத்து விதிகளை முறையாக பின்பற்ற சொல்ல வேண்டும்.
பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்துவதற்காகவே ஆய்வுகள் நடக்கிறது. ஆய்வுக்கு பட்டாசு ஆலை உரிமையாளர்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். ஆய்வைப் பார்த்து யாரும் பயப்படவேண்டாம். இன்றுடன்விபத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.அதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
பெசோ நிலைய அலுவலர் ஜனா, துணை கட்டுப்பாட்டு அலுவலர் ரவிகுமார், அலுவலர்கள் அப்சல் அகமது, சுமீரன் குமார் ஆகியோர் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து விளக்கினர்.
டான்பமா தலைவர்கணேசன், தொழிலதிபர் செல்வராஜன், டிப்மா தலைவர் அசோக், செயலாளர் கண்ணன், டாப்மா செயலாளர் மணிகண்டன், பட்டாசு ஆலை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.