/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நகர் பகுதியில் கஞ்சா புழக்கம் அதிகரிப்பு
/
நகர் பகுதியில் கஞ்சா புழக்கம் அதிகரிப்பு
ADDED : ஏப் 30, 2024 12:16 AM
விருதுநகர் : விருதுநகர் நகர் பகுதியில் கஞ்சா புழக்கம் அதிகரித்துள்ளதால் தினசரி வன்முறை சம்பவங்கள் அரங்கேறுகின்றன என மக்கள் குமுறுகின்றனர்.
விருதுநகர் நகராட்சிக்குட்பட்ட பகுதி பள்ளிகளுக்கு அருகேகஞ்சா விற்கும் கும்பல்கள் தற்போதுஅடிக்கடி பிடிபட்டு வருகின்றன. போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இருப்பினும் ஆங்காங்கே கஞ்சா விற்போர் புதிது புதிதாக முளைத்து கொண்டே இருக்கின்றனர்.
இதே போல்விருதுநகர் நகராட்சி பகுதியை யொட்டி அமைந்துள்ளது அய்யனார் நகர். பாவாலி ஊராட்சியை சேர்ந்தது. இப்பகுதியில் நெருக்கமாக வீடுகள் அமைந்துள்ளன.இங்கு சிலர் கஞ்சா விற்பனை செய்வதாகவும், அதை பயன்படுத்தும் இளைஞர்கள் சிலர் தங்களுக்குள் மோதிக் கொண்டு மக்களுக்கு சிரமத்தை தருவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.
நகரை சுற்றி உள்ள கிராமப்பகுதிகளிலும் அடிக்கடி ரோந்து செய்ய வேண்டும். போலீசாரின் நடவடிக்கை திருப்தி அளிக்கும் வகையில் இருந்தாலும் நாளுக்கு நாள் புது புது போதை அடிமைகள் முளைத்து கொண்டே இருக்கின்றனர்.
வெறுமனே கஞ்சா வழக்கில் பிடிபடுவோரை கைது செய்து கொண்டே இருப்பதை விட போதை அடிமையானதற்கு தேவையான சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக இதை விற்பனையும் செய்யும் பலர் முழு நேர கஞ்சா அடிமைகள் தான்.
கல்லுாரி முடித்த வேலை தேடும் இளைஞர்களும் இதில் பெரும்பான்மையாக உள்ளனர். தங்கள் எதிர்காலத்தை மெல்ல மெல்ல சீரழிக்கின்றனர். ஆகவே மாவட்ட நிர்வாகம் கலந்தாலோசித்து நிரந்தர தீர்வு காண வேண்டும்.

