/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மாவட்டத்தில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்
/
மாவட்டத்தில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்
ADDED : ஆக 16, 2024 03:50 AM

விருதுநகர்: விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடந்த 78வது சுதந்திர தினவிழாவில் கலெக்டர் ஜெயசீலன் கொடி ஏற்றி போலீசார், தீயணைப்பு துறையினர், மாணவர்களின் அணிவகுப்பை ஏற்றுக் கொண்டார். எஸ்.பி., கண்ணன் வரவேற்றார்.
மாவட்ட போலீஸ் துறையில் சிறப்பாக பணியாற்றிய 101 பேர், தீயணைப்புத்துறையில் சிறப்பாக பணியாற்றிய 2 பேருக்கு பதக்கங்கள், மாவட்ட நிலை அலுவலர்கள் 20 பேர் என மொத்தம் பல்வேறு அரசு துறைகளில் சிறப்பாக பணிபுரிந்த மொத்தம் 463 பேருக்கு நற்சான்றிதழ்களை கலெக்டர் ஜெயசீலன் வழங்கினார்.
மேலும் அதிக எண்ணிக்கையில் மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வரும் 3 பேருக்கு விருது, 1 நிறுவனம், 2 தனி நபருக்கு பசுமை சாதனையாளர் விருது, விருதுநகர் உட்கோட்டத்தில் மகப்பேறு சிகிச்சையின் போது உயிர் இழப்பு ஏற்படாதவாறு சிறப்பாக பணியாற்றியதற்காக மருத்துவம், ஊரகநலப்பணிகள் இணை இயக்குநர் பாபுஜி, கலெக்டர் ஜெயசீலன் கேடயம் வழங்கினார். இதில் டி.ஆர்.ஓ., ராஜேந்திரன், திட்ட இயக்குநர் தண்டபாணி, மாவட்ட நிலை அலுவலர்கள், டி.எஸ்.பி.,க்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.
* விருதுநகர் தினமலர் நகரில் உள்ள கிளை அலுவலகத்தில் கொடி ஏற்றப்பட்டது.
* விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனையில் டீன் லலிதா கொடி ஏற்றினார். இதில் துணைக் கண்காணிப்பாளர் அன்புவேல் உள்பட துறைத் தலைவர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், மாணவர்கள், ஊழியர்கள் பலர் பங்கேற்றனர்.
* எஸ்.பி., அலுவலகத்தில் எஸ்.பி., கண்ணன் கொடி ஏற்றினார். போலீசார் பங்கேற்றனர்.
* விருதுநகர் நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி தலைவர் மாதவன் தலைமையில் கமிஷனர் தமிழ்ச்செல்வி முன்னிலையில் கொடி ஏற்றப்பட்டது. நகராட்சி கவுன்சிலர்கள், ஊழியர்கள் பங்கேற்றனர். இனிப்புகள் வழங்கப்பட்டது.
* விருதுநகர் ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு தலைவர் சுமதி ராஜசேகர் கொடி ஏற்றினார். இதில் பி.டி.ஓ., க்கள், ஒன்றியக்கவுன்சிலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.
* விருதுநகர் பா.ஜ., சார்பில் மாவட்டத் தலைவர் பாண்டுரங்கன் அலுவலகத்தில் கொடி ஏற்றினார். அதன் பின் ஆத்துமேடு, கட்டையாபுரம், நெல்கடை மைதானம், பெரியார் பாளையம் உள்பட பகுதிகளில் கொடி ஏற்றி, மக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
* விருதுநகர் அரசு போக்குவரத்து கழகத்தில் பொது மேலாளர் துரைசாமி தேசிய கொடியை ஏற்றினார். சிறந்த பணியாளர்களுக்கு ஊக்கப்பரிசு, தனித்திறன், மேம்பாட்டு போட்டிகளில் வென்ற சிறுவர்களுக்கும், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். மேலும் சிறந்த கிளை மேலாளர், தொழில்நுட்ப மேற்பார்வையாளர், கண்காணிப்பாளர், அலுவலக பணியாளர், டிரைவர்கள், நடத்துனர்கள் என 63 பேருக்கு ஊக்கப்பரிசுகள் வழங்கினார். இதில் தொழில்நுட்பம் துணை மேலாளர் பாண்டியராஜன், வணிக உதவி மேலாளர் சதீஸ்குமார், உதவி மேலாளர்கள் முருகன், ரவிச்சந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.
* விருதுநகர் காமராஜ் பொறியியல், தொழில்நுட்பக்கல்லுாரியில் செயலாளர் தர்மராஜன் கொடி ஏற்றினார். இதில் முன்னாள் மாணவர், சென்னை டி.சி.எஸ்., சிஸ்டம்ஸ் இன்ஜினியர் ஆனந்த பாலாஜி, கல்லுாரி முதல்வர் செந்தில், பேராசிரியர்கள், மாணவர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.
* விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லுாரியில் செயலாளர் சர்ப்பராஜன் கொடி ஏற்றினார். இதில் கல்லுாரி முதல்வர் சாரதி, கல்லுாரித் தலைவர் பழனிசாமி, உப தலைவர்கள் ராஜமோகன், ரம்யா, பொருளாளர் சக்திபாபு உள்பட பலர் பங்கேற்றனர். சுயநிதி பாடப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் காளிதாஸ் நன்றி கூறினார்.
* ஸ்ரீ வித்யா கல்வி குழுமத்தின் சார்பில் தாளாளர் திருவேங்கட ராமானுஜ தாஸ் கொடி ஏற்றினார். இதில் கல்லுாரி முதல்வர்கள், துணை முதல்வர்கள், ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், மாணவர்கள் பலர் பங்கேற்றனர்.
* வே.வ., வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லுாரியில் செயலாளர் கோவிந்தராஜப் பெருமாள் கொடி ஏற்றினார். இதில் நிர்வாகக்குழுத் தலைவர் பழனிசாமி, உப தலைவர் சிவபாலஈஸ்வரி சந்தோஷ்குமார், கூட்டுச் செயலாளர் லதா, பொருளாளர் ரவிசங்கர், கல்லுாரி முதல்வர் சிந்தனா உள்பட பலர் பங்கேற்றனர்.
* விருதுநகர் கே.வி.எஸ்., மேல்நிலைப்பள்ளியில் ஷத்திரிய வித்தியாசாலா மேனேஜிங் போர்டு உறுப்பினர் சங்கரநாராயணன் தலைமையில் செயலாளர் முரளிதரன் கொடி ஏற்றினார்.
* ஷத்திரிய வித்தியாசாலா நடுநிலைப்பள்ளியில் மேனேஜிங் போர்டு உறுப்பினர் கனிஷ்கர் தலை மையில் நாகலிங்கம் தலைமையில் பரணிதரன் முன்னிலையில் ராஜா கொடி ஏற்றினார்.
* திருவள்ளுவர் வித்தியாசாலா நடுநிலைப்பள்ளியில் மேனேஜிங் போர்டு உறுப்பினர் மகேந்திரன் தலைமையில் போர்டு உப தலைவர் சின்னக்கண் கொடி ஏற்றி, மாணவர்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
* கே. காமராஜ் வித்தியாசாலா நடுநிலைப்பள்ளியில் மேனேஜிங் போர்டு பொருளாளர் ரத்தினவேல் கொடி ஏற்றினார். போர்டு உறுப்பினர் கண்ணபிரான் மாணவர்களுக்கு இனிப்பு வழங்கினார்.
* சுப்பிரமணிய வித்தியாசாலா ஆரம்பப்பள்ளியில் ஷத்திரிய வித்தியாசாலா மேனேஜிங் போர்டு உறுப்பினர் முத்துக்குமார் தலைமையில் உறுப்பினர் மாணிக்கவேல் கொடி ஏற்றினார்.
* சரஸ்வதி வித்தியாசாலா ஆரம்பப்பள்ளியில் மேனேஜிங் போர்டு உறுப்பினர் குணசேகரன் தலைமையில் உறுப்பினர்கள் ரத்தினவேல், ரவீந்திரன் முன்னிலையில் போர்டு தலைவர் கார்த்திகேயன் கொடி ஏற்றினார். உறுப்பினர் கணேசன் மாணவர்களுக்கு இனிப்பு வழங்கினார்.
* கி.பெ., பெரியகருப்ப நாடார் ஆரம்பப்பள்ளியில் போர்டு உறுப்பினர் சிவானந்தம் தலைமையில் உறுப்பினர் ரெங்கசாமி கொடி ஏற்றினார். உறுப்பினர் ராம்குமார் மாணவர்களுக்க இனிப்பு வழங்கினார்.
* ஷத்திரிய வித்தியாசாலா நுாற்றாண்டு பள்ளியில் போர்டு உறுப்பினர் சபரிமுத்து தலைமையில் போர்டு பள்ளியின் இணைச் செயலாளர் அருண் கொடி ஏற்றினார்.
* விருதுநகர் ஷத்திரிய மகளிர் நடுநிலைப் பள்ளியில் கே.ஜி.எஸ்., மேனேஜிங் போர்டு தலைவர் நவராஜன் கொடி ஏற்றினார். இதில் உறுப்பினர்கள் வனிதா, குணசேகரன் உள்பட பலர் பங்கேற்றனர்.
* ச.வெ., அண்ணாமலையம்மாள் நடுநிலைப்பள்ளியில் கே.ஜி.எஸ்., மேனேஜிங் போர்டு உபதலைவர் சங்கரதாஸ் கொடி ஏற்றினார். இதில் நிர்வாகக்குழு உறுப்பினர் நாராயணமூர்த்தி உள்பட பலர் பங்கேற்றனர்.
* ஷத்திரிய மகளிர் மேல்நிலைப்பள்ளியில் போர்டு உறுப்பினர் ரெங்கராஜன் கொடி ஏற்றினார். இதில் செயலாளர் சபரிமுத்து, நிர்வாகக்குழு உறுப்பினர் சரவணப்பிரகாசம் உள்பட பலர் பங்கேற்றனர்.
* பெ.சி., சிதம்பர நாடார் ஆங்கிலப்பள்ளியில் போர்டு இணைச் செயலாளர் பாலமுருகன் கொடி ஏற்றினார். நிர்வாகக்குழு உறுப்பினர் நாகபாண்டியன், உறுப்பினர் பாலாஜி உள்பட பலர் பங்கேற்றனர்.
* பெ.சி., சிதம்பர நாடார் ஆங்கிலப்பள்ளியில் (டவுண் வளாகம்) போர்டு பொருளாளர் முத்து கொடி ஏற்றினார்.
* விருதுநகர் முத்தமிழ் காலனியில் தலைவர் நேஷனல் கணேசன் கொடி ஏற்றினார். இதில் செயலாளர் வேலாயுதம், பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.
*
*அருப்புக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் தலைவர் சுந்தர லட்சுமி கொடியேற்றினார். துணைத் தலைவர் பழனிச்சாமி, கமிஷனர் ராஜரத்தினம், முன்னாள் நகராட்சி தலைவர் சிவ பிரகாசம், கவுன்சிலர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
* அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு தலைவர் சசிகலா கொடியேற்றினார். பி.டி.ஓ., க்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
* அருப்புக்கோட்டை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் கூடுதல் மாவட்ட நீதிபதி ஹேமானந்தகுமார் கொடியேற்றினார். சார்பு நீதிபதி செல்வன் ஜேசுராஜா, முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி பத்மநாபன், வக்கீல்கள் சங்கத் தலைவர் ஜோபு ராம்குமார், செயலாளர் ராஜேந்திரன், வக்கீல்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
* அருப்புக்கோட்டை ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், ஆர்.டி.ஓ., வள்ளிக்கண்ணு கொடியேற்றினார். அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
* அருப்புக்கோட்டை ரமணாஸ் மகளிர் கலை கல்லூரியில் செயலர் இளங்கோவன் கொடியேற்றினார். சேர்மன் ராமச்சந்திரன், முதல்வர் தில்லை நடராஜன் வகித்தனர்.பி.எட், கல்லுரியில் முதல்வர் ராஜேந்திரன் கொடியேற்றினார். செயலர் சங்கரநாராயணன் முன்னிலை வகித்தார்.
* எஸ்.பி.கே., கல்லூரியில், தலைவர் மயில்ராஜன் கொடியேற்றினார். செயலர் சங்கரசேகரன் தலைமை வகித்தார். நாடார்கள் உறவின்முறை தலைவர் சுதாகர் சிறப்புரையாற்றினார். முதல்வர் செல்லத்தாய் வரவேற்றார். பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
* தேவாங்கர் கலை கல்லூரியில் முதல்வர் உமாராணி கொடியேற்றினார். பேராசிரியர்கள், அலுவலர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
* மினர்வா பப்ளிக் பள்ளியில் முதல்வர் வேணி கொடியேற்றினார். தாளாளர் கண்ணன் தலைமை வகித்தார். ஆசிரியர்கள் மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
* எஸ்.பி.கே., இன்டர் நேஷனல் பள்ளியில் பழனிச்சாமி கொடியேற்றினார். தலைவர் ராஜேஷ் குமார் தலைமை வகித்தார். துணை முதல்வர் பிரபா வரவேற்றார். முதல்வர் சர்மிளா ப்ரியா நன்றி கூறினார்.
* எஸ்.பி.கே., ஆண்கள் மேல்நிலை பள்ளியில் பள்ளித் தலைவர் ஜெயகணேசன் கொடியேற்றினார். பள்ளிச் செயலர் காசிமுருகன் தலைமை வகித்தார். தலைமையாசிரியர் ஆனந்தராஜன் வரவேற்றார். கலை நிகழ்ச்சிகள் நடந்தது. ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
* எஸ்.பி.கே., பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், நாடார்கள் உறவின்முறை செயலர் சரவணன் கொடியேற்றினார். பள்ளிச் செயலர் ராம்குமார் தலைமை வகித்தார். தலைவர் மதிவாணன் முன்னிலை வகித்தார் தலைமை ஆசிரியை தங்களது வரவேற்றார். கலை நிகழ்ச்சிகள் நடந்தது போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
* ஏ. கல்லுப்பட்டி சித்தி விநாயகர் இந்து துவக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியை சரளாதேவி கொடியேற்றினார். கலை நிகழ்ச்சிகள் நடந்தது. உதவி ஆசிரியை குணவதி நன்றி கூறினார்.
* சௌடாம்பிகா இன்டர்நேஷனல் பள்ளியில் தலைவர் ராஜேந்திரன் கொடியேற்றினார். பள்ளி நிர்வாகிகள் கனகராஜ், சிவசுப்பிரமணியன், புவனேஸ்வரன் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினர். முதல்வர் பாண்டியன் சிறப்புரையாற்றினார்.
* திருச்சுழி வைத்திலிங்க நாடார் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிச் செயலர் பெரியணராஜன் கொடி ஏற்றினார். தலைமை ஆசிரியர் செல்வராஜ் வரவேற்றார். மாணவ மாணவிகள் அலுவலர்கள் கலந்து கொண்டனர். என்.சி.சி., அதிகாரி கதிரேசன் நன்றி கூறினார்.
* பாலவனத்தம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஊராட்சி தலைவர் அன்புராஜ் கொடியேற்றினார்.
* பாலவனத்தம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் உமாதேவி குடியேற்றினார்.
* கடம்பன் குளத்தில் ஊராட்சி தலைவி சுப்புலட்சுமி கொடியேற்றினார்.
____
*காரியாபட்டி, கோர்ட் வளாகத்தில் நீதிபதி மகாலட்சுமியும் , ஒன்றிய அலுவலகத்தில் தலைவர் முத்துமாரி , பேரூராட்சி அலுவலகத்தில் தலைவர் செந்தில் கொடியேற்றினார்.
*காரியாபட்டி போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.ஐ., ஷமிலா பேகம், ஆவியூர் போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.ஐ., வல்லவராணி , செயின்ட் மேரிஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் தாளாளர் கீதா கொடியேற்றினர்.
* தாலுகா அலுவலகத்தில் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் தேவாமிர்தம் ,லயன்ஸ் கிளப் அலுவலக வளாகத்தில் மண்டல தலைவர் குருசாமி ,அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உதவி தலைமை ஆசிரியை காஞ்சனா கொடியேற்றினர்.
*மல்லாங்கிணர் பேரூராட்சியில் தலைவர் துளசிதாஸ் கொடியேற்றினார். போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.ஐ., மகேஸ்வரி கொடியேற்றினார். நரிக்குடி மானாசாலை குட்வில் பள்ளியில் தாளாளர் பூமிநாதன் கொடியேற்றினார். ஒன்றிய வளாகத்தில் தலைவர் காளீஸ்வரி கொடியேற்றினார்.
*சிவகாசி: காளீஸ்வரி கல்லுாரியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. கல்லுாரி செயலர் செல்வராசன் தலைமை வகித்தார்.முதல்வர் பாலமுருகன் தேசிய உறுதிமொழி வாசித்தார். மாணவி சுபாஷினி தேவி வரவேற்றார். சிவகாசி பிரணவ் அசோசியேட்ஸ் கடன், நிதி ஆலோசகர் அரவிந்த் தேசியக்கொடி ஏற்றினார். மாணவிகள் கணேஸ்வரி, தீபலட்சுமி பேசினர். மாணவர் மணிபாலன் நன்றி கூறினார்.
*சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரியில் கல்லூரி முதல்வர் அசோக் தேசியக்கொடி ஏற்றினார். தேசிய மாணவர் படை அதிகாரி வீமராஜ் வரவேற்றார். மானகசேரி பணி ஓய்வு ஹவில்தார் முனியாண்டி பேசினார். தேசிய மாணவர் படை மாணவி கேடட் ராஜேஸ்வரி நன்றி கூறினார். .
* சிவகாசி எஸ்.எப்.ஆர்., மகளிர் கல்லுாரியில் கல்லுாரி முதல்வர் சுதா பெரியதாய் தேசியக் கொடி ஏற்றினார். கல்லுாரி மாணவர் துணை தலைவர் பெத்து லட்சுமி வரவேற்றார். மாணவர் தலைவர் கவுசல்யா சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தினார். முதுகலை வரலாற்று ஆய்வுத்துறை தலைவர் ரம்யா பேசினார். மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடந்தது. மாணவி பொன் நித்யா நன்றி கூறினார்.
* சிவகாசி அரசன் கணேசன் கல்வியல் கல்லுாரியில் கல்லுாரி முதல்வர் ஜெயக்குமார் தேசியக்கொடி ஏற்றினார். பட்டிமன்றம் நடந்தது. உதவி பேராசிரியர் பட்டுக்கனி நடுவராக செயல்பட்டார். ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர் தங்கம் செய்தார்.
*ஹயக்ரீவாஸ் சர்வதேச பள்ளியில் துணை முதல்வர் ஞான புஷ்பம் துவக்கி வைத்தார். லயன்ஸ் கிளப் ஆப் சிவகாசி தலைவர் ரவீந்திரன் தேசியக்கொடி ஏற்றினார்.' பள்ளி தலைமை முதல்வர் பாலசுந்தரம், தாளாளர் ஜெயக்குமார், முதல்வர் அம்பிகா தேவி, துணை முதல்வர் சுதா, ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
*லயன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் அரிமா சங்கம் முன்னாள் தலைவர் வினோத் கண்ணா, முன்னாள் தாளாளர் ரமேஷ் குமார் தலைமை வகித்தனர். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. பள்ளி முதல்வர் ஜெயலட்சுமி பேசினார். பள்ளி துணை முதல்வர் சண்முகராஜா, கல்வி ஒருங்கிணைப்பாளர் பிரேமா கலந்து கொண்டனர். பள்ளி மாணவர் தலைவி விவசா நன்றி கூறினார்.
* அரசு கலை கல்லுாரியில் கல்லுாரி முதல்வர் தங்கதுரை தேசியக்கொடி ஏற்றினார். தமிழ் துறை தலைவர் கிளிராஜ் பேசினார். மாணவர்களுக்கு கட்டுரை, கவிதை, பேச்சு உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
*திருத்தங்கல் லயன்ஸ் மெட்ரிக் பள்ளியில் தலைமை ஆசிரியர் மாதேஸ்வரி வரவேற்றார். பள்ளி தலைவர் லட்சுமணன் தேசிய கொடி ஏற்றினார். மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
*திருத்தங்கல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் தேசியக்கொடி ஏற்றினார். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
*சிவகாசி காமராஜர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தாளாளர் மோகன் தலைமை வகித்தார். யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி மண்டல மேலாளர் அய்யனார் தேசியக்கொடி ஏற்றினார். பாஸ்கரன், கனகவேல் கலந்து கொண்டனர். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
*சிவகாசி அருகே காளையார்குறிச்சி சி.எஸ்.ஐ., தொடக்கப்பள்ளியில் பாரதி ராஜன் தேசியக் கொடி ஏற்றினார். தலைமையாசிரியர் டேனியல் பேசினார். ஊராட்சித் தலைவர் கருப்பசாமி போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். ஆசிரியர் ஹெப்சி வடிவுக்கரசி நன்றி கூறினார். ஒய்.ஐ., கிளப் சார்பில் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.
* ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் சப் கலெக்டர் பிரியா ரவிச்சந்திரன் தேசியக்கொடி ஏற்றினார். சிறப்பாக பணியாற்றிய அலுவலர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. தலைமை உதவியாளர் அகஸ்தீஸ்வரன், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
*திருத்தங்கலில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனது வீட்டிலும், அலுவலகத்திலும் தேசியக்கொடி ஏற்றினார். மக்களுக்கு இனிப்பு வழங்கினார். கட்சியினர் கலந்து கொண்டனர்.
* சிவகாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக் குழு துணை தலைவர் விவேகன் ராஜ் தேசியக்கொடி ஏற்றினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
*சிவகாசி மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் சங்கீதா தேசிய கொடி ஏற்றினார். துணை மேயர் விக்னேஷ் பிரியா கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தனர். சிறப்பாக பணிபுரிந்த துாய்மை பணியாளர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. வார்டு கவுன்சிலர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
*டி.எஸ்.பி., அலுவலகத்தில் சுப்பையா டி.எஸ்.பி., தேசிய கொடி ஏற்றினார்.
*ரிசர்வ்லைன் லார்டு பி.சி.ஏ.ஏ., லயன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்த விழாவில் பள்ளி தலைவர் ரத்தின சேகர் தேசியக்கொடி ஏற்றினார். தாளாளர் ரவீந்திரன், பொருளாளர் கண்ணன் முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் காளீஸ்வரன் வரவேற்றார். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. ஆரம்பப் பள்ளி பொறுப்பாசிரியர் பிரதீபா தங்கம் நன்றி கூறினார். சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
*மைனாரிட்டி எஜுகேஷன் டிரஸ்ட் சார்பில் நடந்த சுதந்திர தின விழாவில் அறக்கட்டளை நிறுவனர் செய்யது ஜாஹிர் உசேன் தலைமை வகித்தார். செயலாளர் ரஹ்மத்துல்லா, பொருளாளர் மாபு பாட்ஷா முன்னிலை வகித்தனர். அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் முகமது இப்ராஹிம் வரவேற்றார். இந்திய தேசிய லீக் மாநில செயலாளர் செய்யது ஜஹாங்கீர் தேசியக்கொடி ஏற்றினார்.கவுரவ ஆலோசகர் தாதா மியான் நன்றி கூறினார்.
*சிவகாசி விஸ்வநத்தம் ஊராட்சியில் தலைவர் நாகராஜ், ஆணையூர் ஊராட்சியில் தலைவர் லட்சுமி நாராயணன், சித்துராஜபுரம் ஊராட்சியில் ஊராட்சி தலைவர் லீலாவதி, தேவர்குளம் ஊராட்சியில் தலைவர் முத்துவள்ளி, பள்ளபட்டி ஊராட்சியில் தலைவர் ராஜபாண்டி, நாரணாபுரம் ஊராட்சியில் தலைவர் தேவராஜன், அனுப்பன்குளம் ஊராட்சியில் தலைவர் கவிதா, செங்கமல நாச்சியார்புரம் ஊராட்சியில் தலைவர் மாரியப்பன் தேசியக்கொடி ஏற்றினர்.
** ஸ்ரீவில்லிபுத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் முதன்மை மாவட்ட நீதிபதி ஜெயக்குமார் கொடியேற்றினார். விழாவில் நீதிபதிகள் சுதாகர், பிரீத்தா, ஜெயசுதாகர், முத்துச்சாமி, அனுராதா, பாரதி, வழக்கறிஞர் சங்க செயலாளர் ஜெயராஜ், நீதிமன்ற ஊழியர்கள், வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.
* ஸ்ரீவில்லிபுத்தூர் இன்னர் வீல் கோல்டன் பிரண்ட்ஸ் கிளப் சார்பில் இந்திரா நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சுதந்திர தின விழா, கிளப் தலைவர் உமா தலைமையில் கொண்டாடப்பட்டது. மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. பள்ளி ஆசிரியர்கள், கிளப் உறுப்பினர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
* கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் வேந்தர் ஸ்ரீதரன் கொடியேற்றினார். விழாவில் இணை வேந்தர் அறிவழகி, துணைத்தலைவர் சசி ஆனந்த், துணைவேந்தர் நாராயணன், பதிவாளர் வாசுதேவன், கல்லூரி முதல்வர்கள், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், பல்கலைக்கழக அலுவலர்கள் பங்கேற்றனர்.
* வி.பி.எம்.எம். கல்லூரியில் கிருஷ்ணன் கோவில் இன்ஸ்பெக்டர் தேவமாதா கொடியேற்றினார். சேர்மன் சங்கர், தாளாளர் பழனிச்செல்வி, முதல்வர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
* மல்லி சுந்தரேஸ்வரி கல்வியியல் கல்லூரியில் நடந்த சுதந்திர தின விழாவில் செயலர் திலீபன் ராஜா கொடியேற்றினார். நிர்வாக அலுவலர் பாலகிருஷ்ணன், முதல்வர் மல்லப்ப ராஜா, கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
* லயன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சுதந்திர தின விழா, விளையாட்டு விழா நடந்தது. பள்ளி தாளாளர் வெங்கடாசலபதி தேசிய கொடி, ஒலிம்பிக் கொடியை செயலர் கார்த்திக், பள்ளி கொடியை பொருளாளர் குணசேகரன் ஏற்றினர். பள்ளி முன்னாள் மாணவி ரூபா ராஜசேகர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார். முதல்வர் சுந்தர மகாலிங்கம் அறிமுக உரையாற்றினார். உடற் கல்வி ஆசிரியர் ஆரான்ராஜ் ஆண்டறிக்கை வாசித்தார். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவில் பள்ளி நிர்வாக குழு உறுப்பினர்கள், லயன்ஸ் சங்கத்தினர், இயக்குனர் கோபாலகிருஷ்ணன், துணை முதல்வர் முகமது மைதீன், துவக்க பள்ளி தலைமை ஆசிரியர் ஆனந்த், பள்ளி ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். ஆசிரியர் முனீஸ்வரன் நன்றி கூறினார்.
* லயன்ஸ் இன்டர்நேஷனல் பள்ளியில் தாளாளர் வெங்கடாசலபதி கொடியேற்றினார். பள்ளி நிர்வாகிகள் குணசேகரன், கார்த்திக், முதல்வர் சிவகுமார், துணை முதல்வர் பாண்டீஸ்வரி, ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
* மகாத்மா வித்யாலயவில் தாளாளர் முருகேசன் தலைமையில் சுதந்திர தின விழா நடந்தது. ஆசிரியை நர்மதா வரவேற்றார். முதல்வர் ராணி கொடியேற்றினார். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நண்பர்கள் ரோட்டரி சங்க தலைவர் பால்சாமி பரிசுகள் வழங்கினார். நகரின் முக்கிய வீதியில் வெளியாக மாணவர்கள் ஊர்வலமாக சென்றனர். ஆசிரியை ஜோஸ்பிரியா நன்றி கூறினார்.
* ஒயிட் பீல்டு மழலையர் துவக்கப்பள்ளியில் முதல்வர் வனிதா தலைமையில் சுதந்திர தின விழா நடந்தது. தாளாளர் ராஜ்குமார் கொடியேற்றினார். மாணவர்கள் பல்வேறு வேடமணிந்து ஊர்வலமாக சென்றனர். பள்ளி ஆசிரியைகள், மாணவர்கள் பங்கேற்றனர்.
* தெலுங்கு குலாலர் ஸ்ரீ சூளை விநாயகர் சி.பி.எஸ்.இ. பள்ளியில் நகராட்சி கவுன்சிலர் முனீஸ்வரி கொடியேற்றினார். தாளாளர் இன்பராஜ், உதவி செயலர் சீனிவாசன், பள்ளி முதல்வர்கள் ராஜலட்சுமி, கற்பகவல்லி, ஆசிரியைகள், அலுவலர்கள் மாணவர்கள் பங்கேற்றனர்.
* வத்திராயிருப்பு ரங்காராவ் லயன்ஸ் பெண்கள் மெட்ரிக் பள்ளியில் லயன் சங்கத் தலைவர் ஆரியன்மதுரம் கொடியேற்றினார். விழாவில் பள்ளி தலைவர் சுந்தரராஜ பெருமாள், தாளாளர் விஜயகுமார், செயலாளர் பால்சாமி பங்கேற்றனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சங்க உறுப்பினர்கள் கிருஷ்ணமூர்த்தி, முத்துக்குமார், அறிவொளி முருகன் பரிசுகள் வழங்கினர். விழாவில் ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர்.
* வத்திராயிருப்பு காந்தி கல்வி கழக துவக்கப்பள்ளியில் பள்ளி செயலர் முத்து கொடியேற்றினார். தலைமை ஆசிரியர் சந்திரா, ஆசிரியர்கள், மாணவர்கள் பெற்றோர்கள் பங்கேற்றனர்.
* வத்திராயிருப்பு வர்த்தக சங்கத்தின் சார்பில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இந்து மேல்நிலைப்பள்ளி முன்னாள் தாளாளர் ராமசுப்பிரமணியன், முன்னாள் எம்.எல்.ஏ. ராமசாமி மற்றும் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.