/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பாதுகாப்பு பயிற்சிக்கு அனுப்பாத பட்டாசு ஆலைகளுக்கு அறிவுறுத்தல்
/
பாதுகாப்பு பயிற்சிக்கு அனுப்பாத பட்டாசு ஆலைகளுக்கு அறிவுறுத்தல்
பாதுகாப்பு பயிற்சிக்கு அனுப்பாத பட்டாசு ஆலைகளுக்கு அறிவுறுத்தல்
பாதுகாப்பு பயிற்சிக்கு அனுப்பாத பட்டாசு ஆலைகளுக்கு அறிவுறுத்தல்
ADDED : ஆக 02, 2024 06:44 AM
சிவகாசி : மாவட்டத்தில் 98 பட்டாசு தொழிற்சாலைகளில் பணிபுரியும் போர்மேன்கள் மற்றும் சூப்பர்வைசர்கள் இதுவரை பயிற்சியை முடிக்கவில்லை, அவர்களை உடனடியாக பயிற்சிக்கு அனுப்ப வேண்டுமென சிவகாசி தொழிலக பாதுகாப்பு மற்றும் பயிற்சி மைய இணை இயக்குனர் ராமமூர்த்தி வலியுறுத்தியுள்ளார்.
மாவட்டத்தில் சிவகாசி, விருதுநகர் சாத்துார் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 1080 பட்டாசு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. பட்டாசு ஆலைகளில் அடிக்கடி வெடி விபத்துக்கள் ஏற்பட்டு தொழிலாளர்கள் உயிரிழப்பதை தடுக்க ஆலைகளில் பணிபுரியும் போர்மேன்கள் , சூப்பர்வைசர் ஆகியோர் பயிற்சி பெற சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு தபால் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதுவரையில் பயிற்சிக்கு வராத 98 பட்டாசு ஆலைகளில் போர்மேன்கள், சூப்பர்வைசர்கள் ஆக. 1 முதல் ஆக. 31 க்குள் பயிற்சியை முடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தவறினால் செப். 1ல் நடவடிக்கை எடுக்க கலெக்டரிடம் பட்டியல் அனுப்பப்படும் என சிவகாசி தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார பயிற்சி மைய இணை இயக்குனர் ராமமூர்த்தி தெரிவித்துள்ளார்.