ADDED : ஜூலை 30, 2024 06:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார், : ஸ்ரீவில்லிபுத்துார் மேகமலை புலிகள் காப்பகத்தின் சார்பில் சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரியில் சர்வதேச புலிகள் தின விழா நடந்தது.
புலிகள் காப்பக துணை இயக்குனர் தேவராஜ் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் அசோக் முன்னிலை வகித்தார்.
விருதுநகர் எஸ்.பி. புரோஸ்கான் அப்துல்லா பேசினார். மேலும் என்.சி.சி., மாணவர்கள் பங்கேற்ற சைக்கிள் ஊர்வலம் நடந்தது. கல்லுாரி வளாகத்தில் புலிகள் குறித்த புகைப்பட கண்காட்சி நடத்தப்பட்டது. மாணவர்களுக்கு ஓவிய போட்டிகள் உட்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது.வனச்சரகர்கள், வனத்துறை ஊழியர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றனர்.

