/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஓடையில் கோரைப் புற்கள் ஆக்கிரமிப்பு
/
ஓடையில் கோரைப் புற்கள் ஆக்கிரமிப்பு
ADDED : மே 05, 2024 06:00 AM

சிவகாசி : சிவகாசி அருகே எரிச்சநத்தம் விருதுநகர் ரோட்டில் உள்ள ஓடையில் கோரைப்புற்கள் ஆக்கிரமித்து உள்ளதால் தண்ணீர் செல்ல வழி இல்லை. எனவே ஓடையை துார்வார வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
சிவகாசி அருகே எரிச்சநத்தம் - விருதுநகர் ரோட்டில் அப்பகுதி கண்மாய்க்கு செல்லும் ஓடை உள்ளது. குடியிருப்புகளின் வழியாகவும் செல்லும் இந்த ஓடை முழுவதுமே கோரைப்புற்கள் ஆக்கிரமித்துள்ளது. கழிவு நீர் இந்த ஓடை வழியாகத்தான் வெளியேற வேண்டும். மழைக்காலங்களில் தண்ணீர் ஓடை வழியாக சென்று கண்மாய்க்கு செல்லும். இந்நிலையில் ஓடை முழுவதும் கோரைப்புற்கள் ஆக்கிரமித்து இருப்பதால் கழிவுநீர், மழை நீர் வெளியேற வழி இல்லை. கோரைப்புற்கள் உள்ளிட்ட ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.