/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ராஜபாளையத்தில் வீடு பெற அழைப்பு
/
ராஜபாளையத்தில் வீடு பெற அழைப்பு
ADDED : ஆக 02, 2024 06:43 AM
விருதுநகர் : கலெக்டர் ஜெயசீலன் செய்திக்குறிப்பு: ராஜபாளையத்தில் நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் மனவளர்ச்சி குன்றிய 200 மாற்றுத்திறனாளிகளின் பெற்றோர்களுக்கு வீடு வழங்கிட தகுதியான நபர்களை தேர்வு செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இத்திட்டத்தில் பயன்பெற சொந்த வீடு, நிலம், காலியிடம் இருக்ககூடாது, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். ராஜபாளையம் பகுதியை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். பங்களிப்பு தொகையாக ரூ.89 ஆயிரம் பணம் செலுத்த தயார் நிலையில் இருக்க வேண்டும். ஆக. 9க்குள் மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விவரங்களுக்கு 04562 -252068 ஐ தொடர்புக்கொண்டு பயனடையலாம், என்றார்.