/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
இரும்பு கண்மணி திட்ட துவக்க விழா
/
இரும்பு கண்மணி திட்ட துவக்க விழா
ADDED : பிப் 26, 2025 07:22 AM
திருச்சுழி: திருச்சுழியில் மாவட்ட நிர்வாகம், ஓஎன்ஜிசி., காவிரி படுகை, மாவட்ட பொது சுகாதாரம், நோய் தடுப்பு மருந்து முறை இணைந்து நடத்திய இரும்பு கண்மணிகள் திட்ட துவக்க விழாவிற்கு கலெக்டர் ஜெயசீலன் தலைமை வகித்தார்.
இந்தத் திட்டத்தில் ஹீமோகுளோபின் அளவு 10.9 க்கும் கீழ் உள்ள 2936 வளர் இளம் பெண்களுக்கு ஊட்டச்சத்து தொகுப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தொகுப்பு பெண்களின் இரத்த சோகை குறைபாட்டை தடுக்கும். திருச்சுழியில் 996, நரிக்குடி 130, அருப்புக்கோட்டையில் 965 ஊட்டச்சத்து தொகுப்புகள் வழங்கப்பட உள்ளன. முதல் கட்டமாக 245 மாணவிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட சுகாதார அலுவலர் யசோதாமணி, திருச்சுழி வட்டார மருத்துவ அலுவலர் புனிதா, ஓஎன்ஜிசி ., காவேரி படுகை நிறுவன அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

