/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
காரியாபட்டி, மல்லாங்கிணர் போலீஸ் ஸ்டேஷன்களுக்கு ஐ.எஸ்.ஓ., தரச்சான்று
/
காரியாபட்டி, மல்லாங்கிணர் போலீஸ் ஸ்டேஷன்களுக்கு ஐ.எஸ்.ஓ., தரச்சான்று
காரியாபட்டி, மல்லாங்கிணர் போலீஸ் ஸ்டேஷன்களுக்கு ஐ.எஸ்.ஓ., தரச்சான்று
காரியாபட்டி, மல்லாங்கிணர் போலீஸ் ஸ்டேஷன்களுக்கு ஐ.எஸ்.ஓ., தரச்சான்று
ADDED : ஜூன் 09, 2024 05:21 AM

காரியாபட்டி : காரியாபட்டி, மல்லாங்கிணர் போலீஸ் ஸ்டேஷன் செயல்பாடுகளை பாராட்டி இந்திய தர கவுன்சில் நிறுவனம் ஐ.எஸ். ஓ.,தரச் சான்றிதழ் வழங்கியது.
காரியாபட்டி போலீஸ் ஸ்டேஷன் 1868ம் ஆண்டு துவக்கப்பட்டது. கூடுதலாக 2011ல் புதிய கட்டடம் கட்டப்பட்டது. போலீஸ் ஸ்டேஷனில் சட்டங்களை அமல்படுத்துதல், குற்றங்களை தடுத்தல், கண்டறிதல், விசாரணை செய்தல், சட்டம் ஒழுங்கை பராமரித்தல், அமைதியை நிலை நாட்டுதல், அவசர நிலைகளுக்கு பதில் அளித்தல், பல சேவைகளை வழங்குதல் உள்ளிட்டவைகளுக்கு ஐ.எஸ்.ஓ., தரச் சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது.
காரியாபட்டி, மல்லாங்கிணர் போலீஸ் ஸ்டேஷனில் வரவேற்பு அறை, காத்திருப்பு அறை, நூலக வசதி, சிறுவர், சிறுமிகளுக்கான பாய்ஸ் கிளப், சுற்றுப்புறச் சுவர்களில் திருக்குறள், அதற்கான விளக்கங்கள், தமிழர்களின் பாரம்பரிய கலைகளின் ஓவியங்கள், பதிவேடுகள் பராமரிப்பு, சட்டம் ஒழுங்கு என அனைத்திலும் சிறப்பு கவனம் செலுத்தி வருகின்றனர்.
இந்திய தர கவுன்சில் சார்பாக சர்வதேச தர கட்டுப்பாட்டு சான்றிதழான ஐ.எஸ்.ஓ., 9001- -- 2015 சான்றிதழ் காரியாபட்டி, மல்லாங்கிணர் போலீஸ் ஸ்டேஷனுக்கு, நேற்று காரியாபட்டியில் கொயெஸ்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி கார்த்திகேயன், எஸ்.பி., பெரோஸ்கான் அப்துல்லாவிடம் வழங்கினார். டி.எஸ்.பி., காயத்ரி, இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், எஸ்.ஐ.,கள் அசோக்குமார், மகேஸ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.