நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர், : விருதுநகர் அருகே குல்லுார்சந்தையில் ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கரக மகோற்ஸவ விழாவை முன்னிட்டு நேற்றுகாலை 7:00 மணிக்கு பால்குடம், தீர்த்தம் கொண்டும் வருதலும், தொடர்ந்து அம்மன் முளைப்பாரி கண் திறப்பும், நடந்தது.
மதியம் 3:00 மணிக்கு பெண்கள்அம்மனுக்கு சீர் கொண்டு வரும் நிகழ்வும், இரவு 7:00 மணிக்கு அம்மன் சக்தி கரகம் கொண்டு வரும் நிகழ்ச்சியும் நடந்தது. ஏற்பாடுகளை தேவாங்கர் மகாஜன சபை, விழா கமிட்டியினர் செய்தனர்.