ADDED : ஆக 10, 2024 06:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்தூரில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் வட்டார அளவிலான கேரம் போட்டிகள் நடந்தது. இதில் வள்ளுவர் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.
இதில் 19 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் இரட்டையர் பிரிவில் ஜனா விஜய், ஸ்ரீ கல்யாண் முதலிடமும், 17 மற்றும் 19 வயதுக்குட்பட்ட மாணவிகள் இரட்டையர்கள் பிரிவில் மகாலட்சுமி, ஹரிணி, அக்ஷயா, சசிபாலா ஆகியோர் முதலிடம் பெற்று மாவட்ட அளவிலான போட்டிக்கு தேர்வு பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தாளாளர் சிவகுமாரன், முதல்வர் டேவிட் மனோகரன், நிர்வாக அலுவலர் சந்தானம், உடற்கல்வி ஆசிரியர்கள் ஜெயக்குமார், ராமலட்சுமி பாராட்டினர்.