ADDED : ஜூலை 19, 2024 06:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர் : விருதுநகரைச் சேர்ந்தவர் பிரியதர்ஷன் 19. இவர் ஏற்கனவே கொள்ளை சம்பவத்தில் கைதாகி சிறையில் உள்ளார்.
இவர் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டு, மக்களை அச்சுறுத்தி பொது அமைதியை சீர்குலைக்கும் செயலில் ஈடுபட்டதால் எஸ்.பி., பெரோஸ் கான் அப்துல்லா பரிந்துரையில் கலெக்டர் ஜெயசீலன் குண்டர் தடுப்புச்சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதனால் பிரியதர்ஷன் குண்டர் தடுப்புச்சட்டத்தில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.