/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
இருக்கன்குடியில் குப்பை வண்டிகள் இல்லாததால் சுகாதார கேடு
/
இருக்கன்குடியில் குப்பை வண்டிகள் இல்லாததால் சுகாதார கேடு
இருக்கன்குடியில் குப்பை வண்டிகள் இல்லாததால் சுகாதார கேடு
இருக்கன்குடியில் குப்பை வண்டிகள் இல்லாததால் சுகாதார கேடு
ADDED : மே 09, 2024 05:00 AM
சாத்துார்: இருக்கன்குடி ஊராட்சியில் குப்பைகள் வாங்க குப்பை வண்டிகள் இல்லாததால் சுகாதாரப் பணிகள் தேக்கமடைந்துள்ளன.
இருக்கன்குடி ஊராட்சியில் அருந்தியர் காலனி, இந்திரா காலனி, அரசு அலுவலர்கள் குடியிருப்பு வீடுகள், இருக்கன்குடி வடக்கு தெரு (மேட்டு தெரு, ஆகிய தெருக்கள் உள்ளன. இந்த ஊராட்சியில் சுகாதாரப் பணிகளை மேற்கொள்வதற்காக வழங்கபட்ட குப்பை சேகரிக்கும் வண்டிகள் முழுவதும் சேதம் அடைந்து பழுதாகி விட்டன.
தற்போது ஊராட்சியில் தூய்மை காவலர்கள் ஒன்று இரண்டு தள்ளு வண்டிகளில் சென்று குப்பை சேகரித்து வருகின்றனர். இவர்களால் அனைத்து பகுதிக்கும் முழுமையாக சென்று குப்பையை சேகரிக்க முடியவில்லை.
இதனால் ஊராட்சி பகுதியில் ஆங்காங்கே குப்பைகுவிந்து சுகாதாரக் கேடாக காணப்படுகிறது. இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்கு பக்தர்கள் அதிக அளவில் வருகை தருகின்றனர். இங்கு குப்பை சேகரிக்க பேட்டரிபொருத்திய வாகனங்கள் இல்லாதது மிகப்பெரிய குறையாகும்.
சுகாதாரப் பணியின் அத்தியாவசியம் கருதி மாவட்ட நிர்வாகம் இருக்கன்குடி ஊராட்சிக்கு தேவையான குப்பை சேகரிக்கும் பேட்டரி வாகனங்களை வழங்கிட வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.