/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நீர்வரத்து ஓடைகளில் பாட்டில்கள் பாதிப்பை சந்திக்கும் கால்நடைகள்
/
நீர்வரத்து ஓடைகளில் பாட்டில்கள் பாதிப்பை சந்திக்கும் கால்நடைகள்
நீர்வரத்து ஓடைகளில் பாட்டில்கள் பாதிப்பை சந்திக்கும் கால்நடைகள்
நீர்வரத்து ஓடைகளில் பாட்டில்கள் பாதிப்பை சந்திக்கும் கால்நடைகள்
ADDED : ஆக 29, 2024 04:49 AM
விருதுநகர்: மாவட்டத்தில் நீர்வரத்து ஓடைகளில் மது, குளிர்பான பாட்டில்கள் அதிகளவில் வீசப்படுகின்றன. ஆபத்தை உணராமல் செய்யும் இந்த செயலால் கால்நடைகள் பாதிக்கப்படுகின்றன.
மாவட்டத்தில் 450 ஊராட்சிகள், 9 பேரூராட்சிகளில் தான் கண்மாய்கள் அதிகளவில் உள்ளன. ஒரு கண்மாய் நிறைந்தால் மற்றொரு கண்மாய்க்கும்நீர்வரும் வகையில் சங்கிலித் தொடர் போல அமைக்கப்பட்டிருக்கும்.
ஒரு கண்மாயில் இருந்து இன்னொரு கண்மாய்க்கு நீர் செல்வதற்கு நீர்வரத்து கால்வாய் தான் ஆதாரம். இது எப்போதும் தண்ணீர் தேங்கியுள்ள ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துார் போன்ற பகுதிகளின் நீர்வரத்து ஓடைகளில் கழிவுநீர் கலப்பது ஒரு பிரச்னை என்றால், விருதுநகர், சிவகாசி, சாத்துாரில் வறண்ட கால்வாயில் புதர்மண்டியுள்ள கருவேல மரங்களால் இன்னொரு பிரச்னை.
இத்தகைய சூழலில் தற்போது அனைத்து ஓடைகளிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால்மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகள் அதில் தண்ணீரை குடிக்கின்றன. ஊரக பகுதி ஓடைகள் முன்பு பார் போல செயல்படுத்தப்பட்டதால் குடிமகன்கள் அதன் பாலத்தில் இருந்து குடித்து விட்டு பாட்டிலை ஓடையில் வீசி செல்வர்.
தற்போது நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பாட்டில்கள் அடித்து செல்லப்படாமல் அங்கேயே கிடக்கின்றன. கால்நடை உயிரினங்களும் தண்ணீரைகுடித்து செல்கின்றன. மிதிக்கும் சூழல் ஏற்பட்டால் நிச்சயம் கால்நடைகளின் கால்கள் காயமடையும்.
இதை கருத்தில் கொண்டு கிராமப்புற நீர்வரத்து ஓடைகளை கண்காணித்து மது, குளிர்பான பாட்டில்கள் போடப்பட்டதை அந்தந்த உள்ளாட்சிகள் சரி செய்ய வேண்டும்.

