/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மின்வேலியில் சிக்கி ஆண் யானை பலி காவலாளியை கைது செய்து விசாரணை
/
மின்வேலியில் சிக்கி ஆண் யானை பலி காவலாளியை கைது செய்து விசாரணை
மின்வேலியில் சிக்கி ஆண் யானை பலி காவலாளியை கைது செய்து விசாரணை
மின்வேலியில் சிக்கி ஆண் யானை பலி காவலாளியை கைது செய்து விசாரணை
ADDED : ஆக 19, 2024 07:09 AM

ராஜபாளையம்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே ராக்காச்சி அம்மன் கோயிலுக்கு செல்லும் வழியில் சட்டவிரோத மின்வேலியில் சிக்கி 15 வயதுள்ள ஆண் யானை உயிரிழந்தது. தோப்பின் காவலாளி துரை பாண்டியை 60, பிடித்து வனத்துறையினர் விசாரிக்கின்றனர்.
ராஜபாளையம் அணைத்தலை ஆற்றை அடுத்து ராக்காச்சி அம்மன் கோயில் செல்லும் வழியில் விரியன் கோயில் பீட் அழகர் காடு பகுதியில் ஏக்கர் தென்னை, மா மர தோப்புகள் உள்ளன.
இதில் ராஜபாளையம் மகேஸ்வரிக்கு சொந்தமான தென்னந்தோப்பில் கணபதி சுந்தரநாச்சியார்புரத்தை சேர்ந்த காவலாளி துரைபாண்டி மான், பன்றி உள்ளிட்ட வன விலங்குகளை வேட்டையாடுவதற்கான சட்டவிரோத மின் வேலி அமைத்திருந்தார்.
வனப்பகுதியில் இருந்து உணவுக்காக தேடி வந்த 15 வயதுள்ள ஆண் யானை மின்வேலியில் சிக்கி மின்சாரம் தாக்கி உயிரிழந்தது நேற்று காலை 10:00 மணிக்கு தெரிந்தது.
ஸ்ரீவில்லிபுத்துார் மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் தேவராஜ் தலைமையிலான வனத்துறையினர், கால்நடை மருத்துவர்கள் விசாரித்தனர். தோப்பின் காவலாளி துரைபாண்டியை கைது செய்து விசாரிக்கின்றனர்.