/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
திறந்த வெளி பாராக மாறும் மல்லாங்கிணர் மின் மயானம்
/
திறந்த வெளி பாராக மாறும் மல்லாங்கிணர் மின் மயானம்
ADDED : மார் 22, 2024 04:24 AM

காரியாபட்டி: மல்லாங்கிணர் மின் மயானம் ரூ. 1 .48 கோடியில் கட்டி முடிக்கப்பட்டு, ஓராண்டாகியும், இன்னும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவில்லை. குடிமகன்கள் திறந்த வெளி பாராக பயன்படுத்தி வருகின்றனர்.
மல்லாங்கிணர் பேரூராட்சிக்கு உட்பட்ட திம்மன்பட்டி அருகே மின் மயானம் அமைக்க முடிவு செய்யப்பட்டு, ரூ. 1.48 கோடியில் கட்டி முடிக்கப்பட்டது. பணிகள் முழுமையாக முடிந்து, திறப்பு விழாவிற்கு தயாராக உள்ளது.
ஓராண்டாகியும் இன்னும் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படவில்லை. இந்நிலையில் கேட்பாரற்றுக் கிடக்கும் புதிய கட்டடத்தை குடிமகன்கள் திறந்த வெளி பாராக பயன்படுத்தி வருகின்றனர். மது போதையில் பாட்டில்களை அங்கேயே போட்டு உடைக்கின்றனர்.
குடிமகன்களுக்குள் ஏற்படும் தகராறால் அப்பகுதியில் போவோர் வருவோர் அச்சத்தில் கடந்து செல்கின்றனர். மேலும்கோடிக்கணக்கான ரூபாய் செலவழித்தும் கட்டடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வராமல் உள்ளதால் நிதி வீணடிக்கப்பட்டு வருகிறது. ஆகவே மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

