/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மாசில்லா சாத்துார்: வீட்டிற்கு ஒரு மரம் வளர்த்து சாதனை தடம் அமைப்பு இளைஞர்கள் அசத்தல்

ADDED : ஆக 26, 2024 05:55 AM

சாத்துார்:
அண்ணா நகர், பெரியார் நகர் இளைஞர்கள் இணைந்து சாலை ஓரங்களில் வீட்டிற்கு ஒருமரம் வரிசையாக வளர்த்து சாதனை புரிந்துள்ளனர். வெயில் சுட்டெரிக்கும் சாத்துாரில் சாலை விரிவாக்க பணி பாதாள சாக்கடை விரிவாக்க திட்டம் குடிநீர் திட்ட பணிகள் என பல்வேறு வளர்ச்சி பணிகளுக்காக சாலை ஓரத்தில் இருந்த மரங்கள் வெட்டி அகற்றப்பட்டன.
இதன் காரணமாக நகர் பகுதி முழுவதும் மரங்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. தன்னார்வ மிக்க இளைஞர்கள் தாங்களாக முன்வந்து தங்களுக்குள் நிதி திரட்டி இழந்த இயற்கை அழகை மீட்க மரக்கன்றுகள் நடத்தொடங்கினர். பெரியார் நகர் அண்ணா நகர் இடையிலான சாலையில் மரக்கன்றுகள் குரோட்டன்ஸ் மரம் செடிகள் அரளிப்பூ செடிகள் வேம்பு, புங்கை, புளிய மரங்கள் என வளர்த்து சோலையாக மாற்றி வருகின்றனர்.
கடும் கோடை காலத்திலும் மரத்தின் நிழலில் இப்பகுதியில் வசிக்கும் மக்கள் வெப்பத்தை உணராத வகையில் சாலையில் நடந்து செல்கின்றனர். அண்ணா நகரில் மட்டுமின்றி பெரியார் நகர், நான்கு வழிச்சாலை ஒரத்திலும் வைப்பாற்றுக் கரைகளிலும் இளைஞர்கள் மரங்களை வளர்த்து உள்ளனர்.
வைப்பாற்றுக் கரையில் நுாற்றுக்கும் மேற்பட்ட பனைமர விதைகளை நட்டி உள்ளனர். வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்போம் என்ற கனவு வாசகத்தை மரம் வளர்த்து நனவாக்கியுள்ளனர்.