/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சர்வீஸ் ரோட்டின் ஓரம் இறைச்சி கழிவுகள் வாகன ஓட்டிகள் அவதி
/
சர்வீஸ் ரோட்டின் ஓரம் இறைச்சி கழிவுகள் வாகன ஓட்டிகள் அவதி
சர்வீஸ் ரோட்டின் ஓரம் இறைச்சி கழிவுகள் வாகன ஓட்டிகள் அவதி
சர்வீஸ் ரோட்டின் ஓரம் இறைச்சி கழிவுகள் வாகன ஓட்டிகள் அவதி
ADDED : ஏப் 22, 2024 06:49 AM

அருப்புக்கோட்டை, : அருப்புக்கோட்டை அருகே சர்வீஸ் ரோடு ஓரங்களில் இறைச்சி, கோழி கழிவுகளை கொட்டுவதால் ஏற்படும் துர்நாற்றத்தில் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
அருப்புக்கோட்டை எஸ்.பி.கே., கல்லூரி ரோடு சந்திப்பு மேம்பாலம் அருகில் சர்வீஸ் ரோடு உள்ளது. இந்த ரோட்டை பயன்படுத்தி தான் தொட்டியாங்குளம், இலங்கிபட்டி, புலியூரான் உட்பட, கிராம மக்கள் நகருக்கு வந்து செல்வர். ஆயிரக்கணக்கான மாணவர்கள் நகரில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளுக்கு இந்த ரோடு வழியாக நடந்தும், சைக்கிள்களிலும் செல்வர்.
சர்வீஸ் ரோடு ஓரங்களில் நகரில் உள்ள கோழி இறைச்சி கடைக்காரர்கள் கழிவுகளை இந்த ரோட்டில் தான் கொட்டி விட்டு செல்கின்றனர். இது தவிர குப்பைகள், கட்டட கழிவுகள் உட்பட இந்த ரோட்டில் தான் கொட்டப்படுகின்றன.
இறந்த விலங்குகளையும் இங்கு வந்து போட்டு விடுகின்றனர். இதனால் இந்த ரோட்டில் கடும் துர்நாற்றம் ஏற்படுகிறது. அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில் உள்ளவர்களும் நாற்றத்தால் அவதிப்படுகின்றனர். ரோட்டை கடந்து செல்லும் வாகன ஓட்டிகளுக்கு மூச்சு திணறல் ஏற்படுகிறது.
இந்த ரோட்டை பராமரித்து சுத்தமாக வைத்துக் கொள்வதில் நகராட்சி நிர்வாகம் மெத்தனம் காட்டுகிறது. இந்த ரோட்டில் இருபுறமும் குப்பைகளை அகற்றி, பராமரித்து சுத்தமாக வைத்துக்கொள்ள நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

