நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை அருகே பாலவநத்தத்தில்இந்தியன் ஆயில், மீனாட்சி மிஷன் மருத்துவமனை சார்பாக இலவச மருத்துவபரிசோதனை முகாம் நடந்தது.
இதில் சர்க்கரை நோய் ரத்த அழுத்தம் உட்பட பரிசோதனைகள் பொதுமக்களுக்கு நடத்தப்பட்டது. டாக்டர் ஹரிஹரன் தலைமையில் மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர். ஏற்பாடுகளை முகாம் மேலாளர் ராஜ்குமார், இந்தியன் ஆயில் மேலாளர் வம்சி கிருஷ்ணா, அதிகாரி கணேஷ் பிரபு, டீலர் ராம்ராஜ், மேலாளர் மாரிமுத்து செய்தனர்.