நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை ஒருங்கிணைந்த கோர்ட் வளாகத்தில் சட்ட பணிக்குழு மற்றும் ஸ்மையில் அறக்கட்டளை இணைந்து இலவச பொது மருத்துவ முகாம் நடத்தியது.
சார்பு நீதிபதி செல்வன்ஜேசுராஜா தலைமை வகித்தார். முகாமில் உயர் ரத்த பரிசோதனை, சர்க்கரை நோய் மற்றும் பிற பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு அவற்றிற்குரிய மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டன.
அருப்புக்கோட்டை முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி பத்மநாபன், குற்றவியல் நடுவர் நீதிபதி முத்துஇசக்கி கலந்து கொண்டனர். அறக்கட்டளை மருத்துவர் ராஜ்குமார், செவிலியர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.