நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி: வெம்பக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, வெம்பக்கோட்டை வட்டார வள மையம் சார்பில் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் நடந்தது.
முதன்மை கல்வி அலுவலர் மதன்குமார், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்ட அலுவலர் மூர்த்தி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குமார் தலைமை வகித்தனர். மனவளர்ச்சி செவித்திறன் குறைபாடு, பார்வை குறைபாடு, உடல் இயக்க குறைபாடு உள்ள மாணவர்களுக்கு மருத்துவ மதிப்பீடு செய்யப்பட்டு, உபகரணங்கள் தேவைப்படுவோருக்கான அளவீடு செய்யப்பட்டது.
பயனாளிகளுக்கு தேநீர் மதிய உணவு பயணப்படி வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை வட்டார வளமைய மேற்பார்வையாளர் சங்கீதா, ஆசிரியர் பயிற்றுநர்கள், சிறப்பு ஆசிரியர்கள் செய்தனர்.

