ADDED : மே 03, 2024 04:58 AM
விருதுநகர்: விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனையில் அகில இந்திய குழந்தைகள் நல மருத்துவர்கள் சங்கத்தின் மதுரை கிளை சார்பில் பிறந்த குழந்தை முதல் 18 வயதுடையோருக்கு ஏற்படும் அலர்ஜி, ஆஸ்துமா பாதிப்புகளை கண்டறிந்து, சிகிச்சை அளிப்பது குறித்து மருத்துவர்களுக்கான பயிற்சி பட்டறை சங்கத்தின் தென் மண்டல துணைத் தலைவர் சிங்கார வேலு தலைமையில் நடந்தது.
இதில் சிறப்பு விருந்தினராக டீன் சீதாலட்சுமி, கவுரவ விருந்தினராக அகில இந்திய குழந்தை நல மருத்துவர்கள் சங்கத்தின் தமிழகத் தலைவர் பாலசங்கர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் மருத்துவர்கள் சோம சிவபாலன், நர்மதா, தக் ஷயானி பேசினர். இதில் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 75 குழந்தைகள் நல மருத்துவர்கள் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை சங்க மதுரை கிளை தலைவர் ஜவஹர், செயலர் சியாம் ஆனந்த், பொருளாளர் கண்ணன் ஆகியோர் செய்தனர்.