நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி:
சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லுாரி நுண்ணுயிரிகள் துறை, மைக்ரோ பயாலஜிஸ்ட் சொசைட்டி சார்பில் கல்லுாரிகளுக்கு இடையேயான குழுமம் மைக்ரோப்ஸ் 2024 என்ற தலைப்பில் பல்வேறு போட்டிகள் நடந்தது.
கல்லூரி முதல்வர் அசோக் தலைமை வகித்தார் மதுரை காமராஜர் பல்கலை நுண்ணுயிரி இயல் தொழில்நுட்பவியல் துறை பேராசிரியர் சண்முகையா பேசினார். விருதுநகர் திருநெல்வேலி தென்காசி மாவட்ட 12 கல்லூரிகளை சேர்ந்த 460 மாணவர்கள் பங்கேற்றனர். இவர்களுக்கு 9 போட்டிகள் நடத்தப்பட்டது. கே.ஆர்., கல்லுாரி மாணவர்கள் கோப்பையை வென்றனர். ஏற்பாடுகளை துறை தலைவர் பிரபு, இணை பேராசிரியர் சிவக்குமார் செய்தனர்.

