/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஆதி திராவிடர் மாணவர் விடுதியை ஆய்வு செய்த அமைச்சர் கயல்விழி
/
ஆதி திராவிடர் மாணவர் விடுதியை ஆய்வு செய்த அமைச்சர் கயல்விழி
ஆதி திராவிடர் மாணவர் விடுதியை ஆய்வு செய்த அமைச்சர் கயல்விழி
ஆதி திராவிடர் மாணவர் விடுதியை ஆய்வு செய்த அமைச்சர் கயல்விழி
ADDED : ஜூலை 26, 2024 12:05 AM
ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்தூர் கோட்டைப் பட்டியில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஆதிதிராவிடர் மாணவர் விடுதியை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி ஆய்வு செய்தார்.
அப்போது சுவரை தட்டி பார்த்தபோது லேசாக அதிர்ந்ததால், என்ன சுவர் அதிர்கிறது எனக் கூறி ஒப்பந்ததாரிடம் விளக்கம் கேட்டார். ஆகஸ்ட் மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என நிபந்தனை உள்ள நிலையில் ஏன் தாமதம் ஏற்படுகிறது எனக் கூறிய அமைச்சர் கட்டடத்தை தரமாகவும், விரைவாகவும் கட்டி முடிக்க அறிவுறுத்தினார். பின்னர் முதல் தளம், இரண்டாம் தளம் கட்டுமான பணிகளை பார்வையிட்டார்.
பின்னர் அமைச்சர் கூறுகையில், தமிழகத்தில் ஆண்டு தோறும் 10க்கும் மேற்பட்ட மாணவர் விடுதிகள் கட்டப்பட்டு வருகிறது. விடுதிகளில் முறைகேடுகளை தடுக்க கண்காணிப்பு கேமரா மற்றும் பயோ மெட்ரிக் முறை கொண்டு வரப்பட்டுள்ளது என்றார்.
கிருஷ்ணன்கோவில் மாணவியர் விடுதி, கோட்டையூரில் தாட்கோ மூலம் கட்டப்பட்ட வரும் வகுப்பறை கட்டிடத்தை ஆய்வு செய்தார். மாவட்ட ஆதிதிராவிட நலத்துறை அலுவலர் ரமேஷ், தனிதாசில்தார்கள் ரவீந்திரன், செந்தில்குமார், தாட்கோ அதிகாரிகள் உடனிருந்தனர்.