/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஊராட்சிகளுக்கு பேட்டரி வாகனங்கள் வழங்கிய அமைச்சர்
/
ஊராட்சிகளுக்கு பேட்டரி வாகனங்கள் வழங்கிய அமைச்சர்
ADDED : பிப் 23, 2025 05:51 AM
காரியாபட்டி : குப்பை சேகரிக்க வாங்கப்பட்ட பேட்டரி ஆட்டோக்கள், வழங்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டு, துருப்பிடித்து, அரசு நிதி வீணடிக்கப்படுவது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து அவற்றை நேற்று அமைச்சர் தங்கம் தென்னரசு ஊராட்சிகளுக்கு வழங்கினார்.
காரியாபட்டி ஒன்றியத்தில் ஊராட்சிகளில் குப்பை சேகரிக்க, தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் பேட்டரி ஆட்டோக்கள் வாங்கப்பட்டன. காரியாபட்டி ஒன்றியத்தில் 36 ஊராட்சிகள் உள்ளன. இதில் முதல் கட்டமாக 31 ஊராட்சிக்கு புதிய பேட்டரி ஆட்டோக்கள் 3 மாதங்களுக்கு முன் வாங்கி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நிறுத்தப்பட்டது.
நம்பர் பிளேட்டுகள் வாகனங்களில் பொருத்தப்பட்டன. ஆனால் ஊராட்சிகளுக்கு வழங்காமல் கிடப்பில் போடப்பட்டன. ஒரு வாகனத்தின் விலை ரூ. 2 லட்சத்து 75 ஆயிரம். இதில் ஊராட்சி நிதி ரூ. 75 ஆயிரம், தூய்மை பாரத இயக்க நிதி ரூ. 2 லட்சம். மழை, வெயிலுக்கு பாதுகாப்பு இல்லாமல் திறந்தவெளியில் போடப்பட்டு, துருப்பிடித்து, அரசு நிதி வீணடிக்கப்பட்டு வருவது குறித்து பிப். 19ல் தினமலர்நாளிதழில் செய்தி வெளியானது. எதிரொலியாக நேற்று அமைச்சர் தங்கம் தென்னரசு ஊராட்சிகளுக்கு அவற்றை வழங்கினார்.