/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
விபத்து பட்டாசு ஆலையில் திருட்டு முயற்சி மர்ம நபர்கள் தப்பி ஓட்டம்
/
விபத்து பட்டாசு ஆலையில் திருட்டு முயற்சி மர்ம நபர்கள் தப்பி ஓட்டம்
விபத்து பட்டாசு ஆலையில் திருட்டு முயற்சி மர்ம நபர்கள் தப்பி ஓட்டம்
விபத்து பட்டாசு ஆலையில் திருட்டு முயற்சி மர்ம நபர்கள் தப்பி ஓட்டம்
ADDED : மே 14, 2024 09:04 AM

சிவகாசி : விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செங்கமலபட்டியில் விபத்து நடந்த பட்டாசு ஆலையில் பட்டாசுகளை திருட வந்த மர்ம நபர்கள் கிராம மக்கள் வரவும் தப்பிச் சென்றனர்.
சிவகாசி அருகே செங்கமலப் பட்டியில் பட்டாசு ஆலையில் 5 நாட்களுக்கு முன்பு வெடி விபத்தில் ஆறு பெண்கள் உட்பட 10 பேர் பலியாகினர். ஆலை குத்தகைதாரர் உட்பட மூன்று பேரை கிழக்கு போலீசார் கைது செய்தனர்.
நேற்று முன் இரவு 10:00 மணிக்கு மேல் விபத்து நடந்த பட்டாசு ஆலைக்கு ஏழு டூ வீலர்கள், ஒரு சரக்கு வேனில் 10க்கும் மேற்பட்ட நபர்கள் வந்தனர். இவர்கள் ஆலையின் கேட்டை திறந்து உள்ளே சென்று அறைகளில் இருந்த பட்டாசுகளை சரக்கு வேனில் ஏற்றினர். தகவல் கிடைத்த செங்கமலப்பட்டி பகுதியை சேர்ந்த 50 க்கும் மேற்பட்டோர் பட்டாசு ஆலைக்கு வந்தனர்.
இவர்களைக் கண்டவுடன் டூவீலர்கள், சரக்கு வேனை அப்படியே போட்டுவிட்டு மர்ம நபர்கள் தப்பி சென்றனர். தொடர்ந்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
மத்திய பெட்ரோலியம் வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை (பெசோ) அதிகாரிகள், விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து நடந்த பட்டாசு ஆலையில் பெசோ சிவகாசி கிளை அதிகாரி ஜனா தலைமையில் ஆய்வு செய்தனர். விபத்தில் தரைமட்டமான கட்டடங்கள், சிதறி கிடந்த பொருட்கள், பட்டாசுக்கான வேதிபொருட்களை ஆய்வுக்காக எடுத்துச் சென்றனர்.

