/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வனப்பகுதி ஆற்றில் குவியும் குப்பை கண்காணிப்பு அவசியம்
/
வனப்பகுதி ஆற்றில் குவியும் குப்பை கண்காணிப்பு அவசியம்
வனப்பகுதி ஆற்றில் குவியும் குப்பை கண்காணிப்பு அவசியம்
வனப்பகுதி ஆற்றில் குவியும் குப்பை கண்காணிப்பு அவசியம்
ADDED : ஆக 11, 2024 05:35 AM

ராஜபாளையம் : ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அய்யனார் கோயில் பகுதியில் வனத்துறை கண்டுகொள்ளாமல் இருப்பதால் குப்பை, பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்து வருகின்றன. வனவிலங்குகள் பாதுகாப்புக்காக முறையான கட்டுப்பாடுகளை அமல்படுத்த வேண்டும்.
ராஜபாளையம் நகர் பகுதி மேற்கு தொடர்ச்சி மலை அடிவார வனப்பகுதியில் மான், மிளா, கரடி, சாம்பல் நிற அணில், யானை உள்ளிட்ட வன விலங்குகளும், அரிய வகை மூலிகை மரங்களும் உள்ளன.
இந்நிலையில் வனத்தை ஒட்டியுள்ள கோயில், ஆறு பகுதிகளில் வழிபாடு உள்ளிட்ட காரணத்தை கூறி குவியும் மக்கள் உணவு பொருட்கள் கொண்டு வரும் பிளாஸ்டிக் குப்பையை அப்பகுதியில் விட்டு செல்கின்றனர். குறிப்பாக சில வாலிபர்கள் தடை செய்யப்பட்ட அதே பகுதிகளில் மாமிச உணவுகளை சமைத்து மது அருந்தி காலி பாட்டில்களை ஆற்று பகுதி நீர்நிலை, வனப்பகுதிகளில் உடைத்துச் செல்லும் அவலம் அதிகரித்துள்ளது.
ஆற்றில் நீர் வரும்போது மட்டும் வனத்துறையினர் பக்தர்களையும், சுற்றுலா பயணிகளையும் கண்காணிப்பு மேற்கொள்கிறோம் என்ற பெயரில் கட்டுப்பாடு விதித்து மற்ற நேரங்களில் நுழைவு கட்டண வசூல் செய்வதோடு கண்டுகொள்ளாமல் விடுகின்றனர்.
இதனால் தடை செய்யப்பட்ட வனப்பகுதி ஆறுகளில் உடைந்த மது பாட்டில்களும் பிளாஸ்டிக் குப்பை குவியல்களும் நிறைந்து காணப்படுகின்றன. வருடம் ஒரு முறை சமூக அமைப்புகள் மூலம் இவற்றை அப்புறப்படுத்தும் பணி நடக்கிறது.
உணவுகளைத் தேடி வரும் குரங்குகள் உள்ளிட்ட வனவிலங்குகள் இவற்றால் பாதிப்பு ஏற்படுவதுடன் இவற்றை தின்று உயிரிழக்கின்றன.
ஏற்கனவே புலிகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டு பாதுகாப்பு வளையத்திற்குள் வந்துள்ள இப்பகுதியை முறையாக கண்காணித்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக், மது பாட்டில்கள் உள்ளிட்டவை கொண்டு வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.