/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நடுரோட்டில் சேதமடைந்த வாறுகால் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
/
நடுரோட்டில் சேதமடைந்த வாறுகால் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
நடுரோட்டில் சேதமடைந்த வாறுகால் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
நடுரோட்டில் சேதமடைந்த வாறுகால் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
ADDED : மார் 30, 2024 05:47 AM

சிவகாசி, : திருத்தங்கல் சுக்கிரவார்பட்டி ரோடு பாலாஜி நகரில் நடு ரோட்டில் திறந்த நிலையில் சேதம் அடைந்துள்ள வாறுகால் மூடியால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர்.
சிவகாசி அருகே திருத்தங்கலில் இருந்து சுக்கிரவார்பட்டி செல்லும் ரோட்டின் கீழ் வாறுகால் உள்ளது.
வாறுகால் துார்வாரப்படுவதற்காக நடுரோட்டில் சிமென்ட் கல் மூடி அமைக்கப்பட்டுள்ளது. இந்த மூடி சேதமடைந்து வாறுகால் திறந்த நிலையில் உள்ளது.
நடு ரோட்டில் இவ்வாறு திறந்த நிலையில் இருப்பதால் வாகனங்கள் சென்று வருவது சிரமம் ஏற்படுகின்றது.
குழந்தைகள், பெரியவர்கள் அடிக்கடி தடுமாறி கீழே விழுகின்றனர். எதிர்பாராத விதமாக வாறுகாலுக்குள் விழுந்தால் பெரிய அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது.
தவிர இரவில் டூவீலர் வருபவர்கள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர்.
எனவே இங்கு விபத்து ஏற்படாதவாறு மூடி அமைக்க வேண்டும் என இப்பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.