/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
குகன் பாறை மேம்பால ரோடு சேதம் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
/
குகன் பாறை மேம்பால ரோடு சேதம் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
குகன் பாறை மேம்பால ரோடு சேதம் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
குகன் பாறை மேம்பால ரோடு சேதம் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
ADDED : மே 03, 2024 05:05 AM

சிவகாசி,: வெம்பக்கோட்டை அருகே துலுக்கன்குறிச்சியில் இருந்து கழுகுமலை செல்லும் ரோட்டில் குகன் பாறை அருகே மேம்பாலத்தில் ரோடு சேதம் அடைந்திருப்பதால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர்.
வெம்பக்கோட்டை அருகே துலுக்கன்குறிச்சியில் இருந்து கழுகுமலை செல்லும் ரோட்டில் குகன் பாறை அருகே 5 ஆண்டுகளுக்கு முன்பு புதிதாக வைப்பாற்றின் மீது மேம்பாலம் கட்டப்பட்டது. இதன் வழியாக கழுகுமலை சங்கரன்கோவில், கோவில்பட்டி, ராஜபாளையம் உள்ளிட்ட நகரங்களுக்கு பஸ்கள் சென்று வருகின்றன. மேலும் இதே பகுதியில் உள்ள பட்டாசு ஆலைகளுக்கான வாகனங்களும் அதிக அளவில் சென்று வருகின்றன. இதனால் இப்பகுதியில் போக்குவரத்து அதிக அளவில் இருக்கும். இந்நிலையில் மேம்பாலத்தில் முன் பகுதியில் ரோடு சேதம் அடைந்து கற்கள் பெயர்ந்து உள்ளது. இது பஸ் உள்ளிட்ட வாகனங்கள் செல்வது சிரமம் ஏற்படுகின்றது.
இங்கு தெருவிளக்குகளும் இல்லாததால் டூவீலரில் வருபவர்கள் அடிக்கடி கீழே விழுகின்றனர். அவ்வப்போது பாலத்தில் சேதமடைந்த ரோட்டில் ஒட்டுப் போடும் பணி மட்டுமே நடக்கின்றது. ஆனால் பாலத்தின் முன்புறம் சேதமடைந்த ரோடு கண்டுகொள்ளப்படவில்லை. எனவே உடனடியாக இங்கு சேதமடைந்த ரோட்டில் சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.