
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நரிக்குடி: நரிக்குடி மறையூர் மாரியம்மன் கோயிலில் ஆடி மாத முளைப்பாரி திருவிழா நடந்தது.
அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டது. பக்தர்கள் நேர்த்திக் கடனாக ஆலயத்தில் உருண்டு கொடுத்தல், மாவிளக்கு எடுத்தனர். கும்மிபாட்டு, ஒயிலாட்டம், நாட்டுப்புற கலைகளுடன் முளைப்பாரி சுமந்து பெண்கள் ஊர்வலமாக சுற்றி வந்தனர்.
கண்மாய் கரையில் விநாயகர் கோயில்அருகில் முளைப்பாரியை கரைத்தனர்.

