ADDED : ஜூன் 11, 2024 07:20 AM
ராஜபாளையம் : ராஜபாளையம் புதுப்பாளையம் மாரியம்மன் கோவில் அருகே அரசு நெல் கொள்முதல் நிலையம் தொடங்கப்பட்டுள்ளது.
ராஜபாளையம் நகர் பகுதி அருகே கடம்பன்குளம், கொண்டனேரி, பெரியகுளம், புதுக்குளம், ஆதியூர், கருங்குளம் , புளியங்குளம், பிரண்டைக் குளம், வெங்காநல்லுார் உள்ளிட்ட கண்மாய்கள் உள்ளன. கோடையில் நடவு செய்த பயிர்கள் தற்போது அறுவடையை எட்டி உள்ள நிலையில் விவசாயிகள் அரசு நெல் கொள்முதல் நிலையம் திறக்க கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதனையடுத்து நேற்று மாலை கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு தினமும் 800 மூட்டைகள் வரை சன்னரகம் கிலோ ரூ.23.10, மோட்டா ரகம் ரூ.22.65 விலை நிர்ணயிக்கப்பட்டு கொள்முதல் நடைபெறுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நிலைய கண்காணிப்பாளர் வெங்கடேசன் வரவேற்றார். வேளாண் அதிகாரி திருமலைசாமி, ஆர்.ஐ., கார்த்திகேயன், விவசாய சங்கம் சார்பில் ராமச்சந்திர ராஜா, அம்மையப்பன் உட்பட விவசாயிகள் கலந்து கொண்டனர்.