ADDED : மே 31, 2024 06:29 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி: சிவகாசி அருகே சாமிநத்தம் ஊராட்சி மகாத்மா காந்தி நகரில் அலைபேசி டவர் அமைப்பதற்கு மக்கள் வீடுகளில் கருப்புக்கொடி கட்டி எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சிவகாசி அருகே சாமிநத்தம் ஊராட்சி மகாத்மா காந்தி நகரில் குடியிருப்புகளுக்கு மத்தியில் தனியார் நிறுவனத்தின் அலைபேசி டவர் அமைக்க பணி துவங்கியது. இதற்கு ஏற்கனவே அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பணிகள் கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில் மீண்டும் அங்கு பணிகள் துவங்கியதால் அப்பகுதி மக்கள் கருப்புக்கொடி கொட்டி எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் வீடுகளிலும் கருப்பு கொடியை கட்டி எதிர்ப்பு தெரிவித்தனர்.