/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
இடிந்து விழும் நிலையில் மேல்நிலைத் தொட்டி
/
இடிந்து விழும் நிலையில் மேல்நிலைத் தொட்டி
ADDED : ஜூலை 31, 2024 04:40 AM

நரிக்குடி, : நரிக்குடி மாணிக்கநேந்தலில் பள்ளி வளாகம் அருகில் இடிந்து விழும் நிலையில் மேல்நிலைத் தொட்டி உள்ளதால் மாணவர்கள் அச்சத்தில் உள்ளனர். விபத்திற்கு முன் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்:
நரிக்குடி மாணிக்கநேந்தலில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.
பள்ளி அருகில் குடிநீர் சப்ளை செய்யும் மேல்நிலைத் தொட்டி உள்ளது. இதனை பல ஆண்டுகளுக்கு முன் கட்டினர். கட்டடத்தின் துாண் சேதம் அடைந்து கம்பிகள் துருப்பிடித்து, வெளியில் தெரிகிறது.
எப்போது இடிந்து விழுமோ என்கிற ஆபத்தான நிலையில் உள்ளது. மேல்நிலைத் தொட்டி அருகில் விளையாட்டு மைதானம் அமைந்துள்ளதால் பள்ளி நேரங்களில் மாணவர்கள் அங்கு விளையாடி கொண்டிருப்பர். இடிந்து விழும் சூழ்நிலையால் மாணவர்கள் அச்சத்தில் உள்ளனர்.
விபத்திற்கு முன் இதனை அப்புறப்படுத்தி, புதிய மேல்நிலைத் தொட்டி கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்கிராமத்தினர் வலியுறுத்தினர்.

