/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ரூ.5,000 லஞ்சம் பெற்ற ஊராட்சி தலைவர் கைது
/
ரூ.5,000 லஞ்சம் பெற்ற ஊராட்சி தலைவர் கைது
ADDED : ஜூலை 28, 2024 02:59 AM

விருதுநகர்:விருதுநகர் அருகே கத்தாளம்பட்டியைச் சேர்ந்தவர் மணிமாறன், 30. இவர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், 108 ஆம்புலன்ஸ் டிரைவராக பணிபுரிகிறார். இவர் துலுக்கப்பட்டியில் தனக்கு சொந்தமான நிலத்தில் வீடு கட்ட ஆன்லைனில் பிளான் அப்ரூவலுக்கு விண்ணப்பித்திருந்தார்.
இதற்காக ஊராட்சி தலைவர் நாகராஜனை, 55, அணுகிய போது, அப்ரூவலுக்கு 5,000 ரூபாய் லஞ்சம் கேட்டார். இதுகுறித்து மணிமாறன் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் தெரிவித்தார்.
போலீசார் அளித்த ஆலோசனை யின்படி ரசாயனம் தடவிய 5,000 ரூபாயை நாகராஜனிடம் நேற்று கொடுத்த போது, ஏ.டி.எஸ்.பி., ராமச்சந்திரன், தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் நாகராஜனை கைது செய்தனர்.
நாகராஜன் தே.மு.தி.க., ஊராட்சி செயலராகவும் உள்ளார்.