/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ரோடு சேதம், உயர்த்தி கட்டிய வாறுகாலால் அவதியில் மக்கள்
/
ரோடு சேதம், உயர்த்தி கட்டிய வாறுகாலால் அவதியில் மக்கள்
ரோடு சேதம், உயர்த்தி கட்டிய வாறுகாலால் அவதியில் மக்கள்
ரோடு சேதம், உயர்த்தி கட்டிய வாறுகாலால் அவதியில் மக்கள்
ADDED : ஜூலை 02, 2024 06:21 AM

சிவகாசி : சிவகாசி அருகே பள்ளப்பட்டி ஊராட்சி பி.எஸ்.கே., நகரில் சேதமான ரோடு, சேதத்தால் குடியிருப்புவாசிகள் அவதிப்படுகின்றனர். மேலும் திட்டமிடாமல் உயர்த்தி கட்டப்பட்ட வாறுகாலால் மக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர்.
சிவகாசி அருகே பள்ளப்பட்டி ஊராட்சி பி.எஸ்.கே., நகரில் இதுவரையிலும் ரோடு அமைக்கப்படவில்லை. தெருக்கள் முழுவதுமே வெறும் மண் ரோடாக குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதில் டூவீலர் உட்பட எந்த வாகனம் சென்று வர முடியவில்லை. மழைக்காலங்களில் தண்ணீர் வெளியேற வழி இன்றி வீடுகளுக்குள் புகுந்து விடுகின்றது.
சமீபத்தில் இப்பகுதியில் 15 வது நிதி குழு மானிய திட்டத்தின் கீழ் வாறுகால் கட்டப்பட்டது. ஆனால் வாறுகால் மிகவும் உயரமாக கட்டப்பட்டுள்ளதால் அடுத்தடுத்து உள்ள தெருக்களுக்கு மக்கள் செல்ல முடியவில்லை. தவிர இந்த வாறுகாலில் கழிவுநீர் செல்ல வழி இல்லை. மேலும் தெரு பள்ளமாக காட்சியளிக்கிறது. இதனால் தற்போதும் சிறிய மழை பெய்தாலும் தண்ணீர் வீடுகளுக்குள் புகுந்து விடுகின்றது.
இப்பகுதியில் குடிநீர் பற்றாக்குறையாலும் மக்கள் அவதிப்படுகின்றனர். எனவே ரோட்டினை சீரமைத்து, குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க வேண்டும் என இப்பகுதி குடியிருப்புவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.