/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
செயல்படாத குடிநீர் தொட்டி தண்ணீரை விலைக்கு வாங்கும் மக்கள்
/
செயல்படாத குடிநீர் தொட்டி தண்ணீரை விலைக்கு வாங்கும் மக்கள்
செயல்படாத குடிநீர் தொட்டி தண்ணீரை விலைக்கு வாங்கும் மக்கள்
செயல்படாத குடிநீர் தொட்டி தண்ணீரை விலைக்கு வாங்கும் மக்கள்
ADDED : மே 05, 2024 05:46 AM

சிவகாசி, : திருத்தங்கல் பாண்டியன் நகர் 5 வது தெருவில் செயல்படாத மேல்நிலை குடிநீர் தொட்டியால் குடியிருப்புவாசிகள் தண்ணீரை விலைக்கு வாங்கி சிரமப்படுகின்றனர்.
திருத்தங்கல் பாண்டியன் நகர் 5வது தெருவில் 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் மக்களின் பயன்பாட்டிற்காக 2004ல் மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டப்பட்டது.
ஆனால் தற்போது பயன்பாட்டில் இல்லாமல் காட்சிப் பொருளாக உள்ளது. இப்பகுதி மக்களுக்கு 15 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்படுகின்றது.
இது அனைவருக்கும் போதாத நிலையில் சிரமப்படுகின்றனர்.
இந்நிலையில் மக்கள் புழக்கத்திற்கும் தண்ணீர் இல்லாமல் அவதிப்படுகின்றனர்.
எனவே இப்பகுதி மக்கள் குளிக்க, துணி துவைக்க என புழக்கத்திற்கும் தண்ணீரை குடம் ரூ. 5 என விலைக்கு வாங்கி பயன்படுத்துகின்றனர்.
பட்டாசு தொழிலாளர்கள், கூலித் தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் இப்பகுதி மக்கள் தினமும் தண்ணீரை விலைக்கு வாங்குவதில் சிரமம் ஏற்படுகின்றது.
எனவே இப்பகுதியில் வீணாக உள்ள குடிநீர் தொட்டியை பயன்பாட்டிற்கு கொண்டு வந்து புழக்கத்திற்கு தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.