/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ரோட்டை சீரமைக்க மக்கள் எதிர்பார்ப்பு
/
ரோட்டை சீரமைக்க மக்கள் எதிர்பார்ப்பு
ADDED : ஆக 04, 2024 06:17 AM

சிவகாசி : சிவகாசி விளாம்பட்டி ரோடு விலக்கிலிருந்து சித்துராஜபுரம் செல்லும் ரோட்டில் சேதமடைந்த பகுதிகளை சீரமைக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
சிவகாசி விளாம்பட்டி ரோடு விலக்கிலிருந்து சித்துராஜபுரம் 3 கி.மீ.,தொலைவில்உள்ளது.
சித்துராஜபுரம் மட்டுமின்றி பூலாவூரணி ஊராட்சிக்கு உட்பட்ட பிருந்தாவனம் நகர், ராஜதுரை நகர் பகுதி பள்ளி, கல்லுாரி மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் எளிதாக சிவகாசிக்கு வர இந்த ரோட்டினை பயன்படுத்துகின்றனர்.
மேலும் பட்டாசு ஆலை வாகனங்களும் இந்த ரோட்டில் தான் வருகின்றன. ஆனால் இந்த ரோடு ஆங்காங்கே சேதமடைந்துள்ளது.
ஒரு சில இடங்களில் குடிநீர் குழாய் உடைந்ததால் அப்பகுதியில் ரோடும் பெரிய பள்ளமாக மாறிவிட்டது.
இதனால் இந்த ரோட்டில் வரும் வாகனங்களும் பெரிதும் சிரமப்படுகின்றன. குறிப்பாக மாணவர்களை ஏற்றி வருகின்ற பள்ளி வாகனங்கள் தட்டுத்தடுமாறிவருகின்றது.
எனவே இப்பகுதியில் சேதமடைந்த ரோட்டினை உடனடியாக சீரமைக்க வேண்டும் என இப்பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.