/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சாத்துாரில் தொடர் நகை பறிப்பு திருடர்களால் மக்கள் அச்சம்
/
சாத்துாரில் தொடர் நகை பறிப்பு திருடர்களால் மக்கள் அச்சம்
சாத்துாரில் தொடர் நகை பறிப்பு திருடர்களால் மக்கள் அச்சம்
சாத்துாரில் தொடர் நகை பறிப்பு திருடர்களால் மக்கள் அச்சம்
ADDED : செப் 06, 2024 04:32 AM
சாத்துார்: சாத்துாரில் இருசக்கர வாகனத்தில் வந்து பெண்களிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட திருடர்களை பிடிக்க முடியாமல் போலீசார் திணறும் நிலையில் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
சாத்துார் சடையம்பட்டி வளரும் நகரிலும் பிள்ளையார் கோயில் தெருவில் நடந்து சென்ற பெண்களிடம் நகைகளை மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தில் வந்து பறித்துச் சென்றனர்.
மேலும் வெங்கடாசலபுரம் பாரதி நகரில் பூட்டி இருந்த வீட்டின் கதவை உடைத்து ஏழு பவுன் நகையை மர்ம நபர்கள் திருடி சென்றனர் இதிலும் குற்றவாளியை பிடிக்க முடியாமல் போலீசார் திணறும் நிலையில் உள்ளது. சிசிடிவி பதிவு மற்றும் சிறையில் இருந்து விடுதலையான பழைய குற்றவாளிகளின் பதிவேடுகளை வைத்து நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட திருடர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
இருந்தும் இன்றுவரை திருடர்களை பிடிக்க முடியவில்லை. நடை பயிற்சி மேற்கொள்ளும் பெண்களிடமும் பூட்டி கிடக்கும் வீடுகளிலும் நகைகளை திருடும் குற்றவாளிகளை விரைந்து பிடிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.