/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
இருக்கன்குடியில் உலா வரும் பன்றிகளால் மக்கள் அவதி
/
இருக்கன்குடியில் உலா வரும் பன்றிகளால் மக்கள் அவதி
ADDED : ஆக 12, 2024 05:05 AM
சாத்துார், : சாத்துார் இருக்கன்குடி ஊராட்சியில் பன்றிகள் சுதந்திரமாக உலா வருவதால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இருக்கன்குடி ஊராட்சியில் காட்டுப்பகுதியிலும் ஆற்றிலும் அதிக அளவில் பன்றிகள் வளர்க்கப்படுகின்றன. இந்த பன்றிகள் இரவு, பகல் நேரங்களில் ஊருக்குள் சுதந்திரமாக உலா வருகின்றன.
குப்பையையும் சாக்கடையையும் பன்றிகள் கிளறுவதால் துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. கூட்டமாக உலா வரும் பன்றிகள் இரவு நேரத்தில் வீடுகள் முன்பு வளர்க்கப்படும் செடிகளை தின்று அழித்து விடுகின்றன.
தற்போது இருக்கன்குடிக்கு வெளியூரில் இருந்து அதிக அளவில் மாரியம்மன் பக்தர்கள் வரும் நிலையில் சுதந்திரமாக உலா வரும் பன்றிகளால் பக்தர்களின் உடல் நலம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
இருக்கன்குடி ஊராட்சி பகுதியில் தொற்று நோய் பரவுவதை தடுக்க பன்றிகளை கொட்டடியில் அடைத்து வைத்து வளர்க்க அதிகாரிகள் உரிய அறிவுறுத்தல்களை உரிமையாளர்களுக்கு வழங்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.