ADDED : ஜூலை 23, 2024 04:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார்: வெம்பக்கோட்டை வைப்பாற்று பகுதியில் இருந்து மாலை 5:30 மணிக்கு ஆண் புள்ளி மான் ஒன்று பஸ் ஸ்டாண்டு பகுதியில் சுற்றித் திரிந்தது.
தெரு நாய்கள் அதனை விரட்டின. நாய்களிடமிருந்து மானை காப்பாற்றிய மக்கள் மானை பிடித்து கட்டி போட்டு பின் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். ஸ்ரீவில்லிபுத்துார் வனத்துறையினர் மானை பிடித்து சென்று காட்டுப் பகுதிக்குள் விட்டனர்.

