பணம் பறிக்க முயன்ற இரு சிறுவர்கள் கைது
சிவகாசி: திருத்தங்கல் முத்துமாரி நகரை சேர்ந்தவர் தங்கப்பாண்டி 48. புரோட்டா மாஸ்டர். இவர் நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து ஆலமரத்துப்பட்டி ரோட்டில் முத்துமாரி நகர் அருகே வரும்போது திருத்தங்கல் சுப்பிரமணிய கோயில் தெருவை சேர்ந்த 17 வயதுடைய இரு சிறுவர்கள் வழிமறித்து பணத்தை பறிக்க முயன்றனர். திருத்தங்கல் போலீசார் இரு சிறுவர்களையும் கைது செய்தனர்.-----
---பட்டாசு பறிமுதல்
சிவகாசி: பி.கே.எஸ்.ஏ., ஆறுமுகம் ரோடு பகுதியை சேர்ந்தவர் அற்புதகுமார் 54. இவர் அதே பகுதியில் உள்ள தனக்கு சொந்தமான கடையில் அரசு அனுமதி இன்றி சரவெடிகள், பட்டாசுகள் வைத்திருந்தார். கிழக்கு போலீசார் அவரை கைது செய்து, ரூ. ஒரு லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.
பஸ் மோதி தம்பதி காயம்
சிவகாசி: ரிசர்வ் லைன் கோபுரம் காலனி சேர்ந்தவர் கண்ணன் 42. இவர் தனது மனைவி சித்ராதேவியை ஏற்றிக்கொண்டு டூவீலரில் பிள்ளையார் கோயில் பஸ் ஸ்டாப் அருகே சென்ற போது வத்திராயிருப்பு தம்பி பட்டியைச் சேர்ந்த கர்ணன் ஓட்டி வந்த பஸ் மோதியதில் இருவரும் காயமடைந்தனர். டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.-------
கிணற்றில் மூழ்கி தொழிலாளி பலி
சிவகாசி: மீனம்பட்டி அம்பேத்கர் காலனியைச் சேர்ந்தவர் பட்டாசு தொழிலாளி பழனிச்சாமி 35. கடைக்கு போவதாக நேற்று முன்தினம் இரவு 7:15 மணியளவில் தனது டூவீலரில் சென்றார். இரவில் வீடு திரும்பவில்லை. அனுப்பங்குளம் கண்மாய் பகுதியில் உள்ள கிணற்றில் தண்ணீரில் மூழ்கி இறந்து கிடந்தார். கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
டூவீலர்கள் எரிப்பு; இளைஞர் கைது
ராஜபாளையம்: ராஜபாளையம் பெரியமந்தை தெருவை சேர்ந்தவர் விஜய பிரபாகரன்36. நேற்று முன் தினம் வீட்டிற்கு முன் இரவு டூவீலரை நிறுத்திவிட்டு துாங்க சென்றுள்ளார். நள்ளிரவில் டூவீலர்கள் தீப்பிடித்து எரிவதை பார்த்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தண்ணீர் ஊற்றி அணைத்துள்ளார். இதில் மூன்று டூவீலர்கள் தீக்கிரையாகின. விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த ராம்குமார்27, டூவீலர்களுக்கு தீ வைத்ததும், தம்பி மனைவியை விஜய பிரபாகரன் சகோதரர் மாரீஸ்வரன் அழைத்து சென்று குடும்பம் நடத்தியதால் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக தீ வைத்தது தெரிந்து ராம்குமாரை வடக்கு போலீசார் கைது செய்துள்ளனர்.
அரசு பஸ் கண்டக்டர் மீது வழக்கு
சாத்துார்: சாத்துார் வெங்கடாசலபுரத்தை சேர்ந்தவர் கனகலட்சுமி, 33. மே 21ல் மாலை 6 :00 மணிக்கு சின்னக் காமன்பட்டியில் இருந்துஅரசு டவுன் பஸ்சில் ஏறி வெங்கடாசலபுரம் வந்தார். அப்போது வாசலில் நின்று கொண்டிருந்த கண்டக்டர் பேராபட்டி முரளி கிருஷ்ணனை , 28. விலகிக் கொள்ள கூறியபோது அவர் அசிங்கமாக பேசி பெண்ணை தாக்கினார். சாத்துார் போலீசார் அரசு பஸ் கண்டக்டர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.